பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 04 பெரியபுராணம்- ஓர் ஆய்வு அன்புக்கண்ணிர் ஊற்றெடுக்கும் கண்கள் வருணனை: நான்காவது அடியில் வாய் பேசப்படுகிறது. இதுவே ஒரு பக்தனின் முழுவடிவ மாகும். ஒவியத்து எழுத ஒண்ணா உருவம் ' என்று இராமனைக் கம்பன் கூறுகிறான். இங்கு பக்தனின் உருவத்தை யும் ஒவியத்து எழுத முடியாது. புறவடிவம், கண்கள், வாய் என்பவற்றைக் காட்டிவிடலாம். ஆனால் இவை மூன்றின் செயல் களும், மனிதனுடைய கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட சிந்தை எனப்படும் அகமனத்தில் நிகழும் நிகழ்ச்சியின் பயனாக நடை பெறுபவை. எனவே புறக் கோலத்தை எவ்வளவு எழுதிக் காட்டினாலும், அகமன நிகழ்ச்சியைக் காட்ட முடியாதாகலின் ஒவியம் முற்றுப் பெறாது. என்றாலும் கவிதையில் இதனை வடிக்கச் சேக்கிழார் ஒருவரால்தான் முடியும். ஒரு மாபெரும் பக்தரின் புற, அகத் தோற்றம் இனி இரண்டாவதாக உள்ள பாடலைக் காணலாம். இது குறிக்கோள் தன்மை பெற்ற (ideal mystic) ஒரு பக்தன் இறைவனை வணங்கும் நிலையை விவரிப்பதாகும். கைகள் தலைமிசை கூப்பியுள்ளன; கண்கள் ஓயாது நீர் சொரிகின்றன; அந்தக் கரணங்கள் நான்கும் உருகுகின்றன; உடல் தரையில் விழுந்து வணங்கி, வணங்கி எழுகின்றது; இந்த முறையில்தான் பக்தர் வழிபடுகின்றார். இந்த வருணனை நாவரசர் தில்லையில் வழிபட்டதைக் குறிக்கிறது. இனி நம்பியாரூரராகிய சுந்தரர் தில்லையில் கும்பிட்டதை வருணிக்கும் பாடலையும் உடன் வைத்துக் காண்டல் பயனுடையதாகும். ஐந்துபேர் அறிவும கண்களே கொள்ள அளப்பரும் கரணங்கள் நான்கும் சிந்தையேயாகக் குனம் ஒரு மூன்றும் திருந்து சாத்துவிகமே ஆக இந்துவாழ் சடையான் ஆடும் ஆனந்த எல்லையில் தனிப்பெருங் கூத்தின் வந்தபேர் இன்ப வெள்ளத்துள் திளைத்து மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்' " என்ற பாடல் ஆரூரர் தொழுத காட்சியைக் கூறுகிறது. நாவரசரைப் பற்றிக் கூறும்பொழுது நாயகன் சேவடி தைவரு சிந்தை' என்று கூறிய கவிஞர், இங்கு அகமனம் குவிந்து இற்ை. யன்பில் திளைக்க முற்படும் பொழுது நிகழும் செயல்களை வரிசைப்படுத்துகிறார். ஐம்பொறிகளின் வழிச் சென்று தனித் தனியே தொழிற்படும் ஐந்து பெரிய அறிவும் இப்பொழுது கண்