பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாவது சுவை 5 05 ஒன்றின் வழியே சென்றனவாம். மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என்ற அந்தக்கரணங்கள் நான்கும் சிந்தையுள் அடங்கிவிட்டனவாம். தாமஸ், இராஜஸ், சத்துவ குணங்கள் மூன்றும் சத்துவத்துள் அடங்கிவிட்டனவாம். இந்த நிலையில் தான் எல்லையில் தனிப் பெருங் கூத்தில் இலயித்தார் என்கிறது LYT.-8U. அறிவு ஒன்றேயாயினும் ஐம்பொறிகளின் வழிச் செல்கையில் தனித்தனியான தொழிலைச் செய்தலின் ஐந்து பேர் அறிவு எனக் கூறுகிறார். அன்றியும் ஒவ்வொரு பொறிவழிச் செல்லும் அறிவும் தனித்தனியாக இருப்பின் அவை அனைத்தும் ஒன்று சேர்ந்தால் எத்துணை வலுவுடையதாக இருக்குமோ அத்துணை வலுவுடன் காணும் அறிவு கண்ணின் வழிப்பட்டது எனினுமாம். சித்தத்தைக் காட்டிலும் வியாபித்து நிற்கும் இயல்புடையன புத்தி (Pure intellect), அகங்காரம் (Ego) என்பனவாம். துனித்துப் பொருளை ஆயும் புத்தியும், தன்னை வேறுபடுத்திப் பொருளைக் காணும் அகங்காரமும் தத்தம் தொழிலை விட்டுச் சித்தத்தில் (Sub-conscious mind) - PILÍŘjálsrouTub. G (5 uảggyamLu அனுபவத்தில் ஏற்படும் இந்த நுண்மையான மாற்றங்களையும், வளர்ச்சியையும் இப்படிப் போகிற போக்கில் சொல்லிச் செல்லச் சேக்கிழார் ஒருவரால்தான் முடியும். திருநாவுக்கரசரைப் பொறுத்த மட்டில் மூன்றாவதாகக் காட்டப் பெற்ற பாடல் அவர் சீர்காழியில் பிள்ளையாரைச் சந்திக்க வந்தபொழுது இருந்த நிலையை விளக்குவதாகும். இப் பாடலில் (1) சிந்தை இடையறா அன்பு (2) திருமேனிதனில் அசைவு (3) கந்தைகூட மிகை என்னுங் கருத்து (4) கையில் உழவாரப்படை (5) கண்ணிர் மழை (6) வடிவிற்பொலி திருநீறு என்பவை பேசப் பெறுகின்றன. இவற்றுள் திருமேனிதனில் அசைவு, கையில் உழவாரப் படை என்பவை புதிதாகக் கூறுப் பெற்ற செய்திகளாகும். திருமேனியில் நடுக்கம் (அசைவு) தோன்றும் அளவிற்கு முதிர்ந்த பருவம் உடைய ஒருவர்; ஆனால் கைத்தொண்டு செய்யும் பழக்கத்தை விடாமற் போற்றி வருகிறார். பழைய இரண்டு பாடல்களுடன் இதனையும் கூட்டிப் பார்க்கும் பொழுது ஒரு மாபெரும் பக்தரின் (a great Mystic) அக, புற வடிவமைப்பை முற்றிலும் மனத்தில் பதியுமாறு கவிஞர் கூறிவிடுகிறார். இனி இதிலுள்ள ஒரு சிறப்பையும் அறிதல் வேண்டும். நாவரசர் காழிப் பிள்ளையாரைச் சந்திக்கச் செல் கிறார். காழியார் நாவரசரைப்பற்றி மிகுதியும் கேள்விப்பட்டுள் ளார்: எனினும் நேரே இதுவரை கண்டதில்லை. என்றாலும்