பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 06 பெரியபுராணம்- ஓர் ஆய்வு நாம் ஒருவரை நேரே காணாமல் அவரைப்பற்றி அதிகம் கேள்விப் பட்டால், அவரைப்பற்றிய உருவம் நம்முடைய கற்பனையில் தோன்றி நம்முள் தங்கிவிடும். பல சமயங்களில் நம் கற்பனை உருவத்திற்கும் அவருடைய உண்மையான வடிவிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லாமற் போதலும் உண்டு. ஆனால் திருஞான சம்பந்தரைப் பொறுத்தமட்டில் இது எவ்வாறு இருந்தது எனத் தொண்டர்சீர் பரவ வல்லவராகிய சேக்கிழார் இதோ கூறுகிறார். சேக்கிழாரும் பக்தி அனுபவத்தில் திளைத்தவரே திருஞான சம்பந்தர், உண்மையான இறையன்பு கொண்ட தொண்டர் என்பவர் இப்படித்தான் இருப்பார் என்று தம் கற்பனையில் வடிவமைத்துக் கொண்டிருந்தார். ஆயிரக் கணக்கான பக்தர்களைப் பார்த்தும், தம் கற்பனையில் உள்ள வடிவம் பெற்ற ஒருவரை அன்றுவரைப் பிள்ளையார் கண்ட தில்லை. ஆனால் நாவரசர் வருவதைக் கண்டவுடன் தம், ‘........ கருத்தில் பரவு மெய்க்காதல் தொண்டர் திருவேடம் நேரே தோன்றிய தென்று தொழுதே.......... * 16 ஒரு பக்தர் மற்றொரு பக்தரை அடையாளங் கண்டு கொள் வதில் வியப்பு ஒன்றும் இல்லை. ஆனால் அடையாளங் கண்டு கொண்ட விதத்தைக் கவிஞர் கூறியுள்ள முறை வியப்பைத் தருவதாக உள்ளது. ஆண்டில் மிக்க இளையவராக உள்ள காழியார் மனத்தில் வயது முதிர்ந்த அடியார் உருவம் எவ்வாறு பதிந்தது? தம் கருத்தில் முன்னமே உருவாகித் தம்மால் வழிபடப் படும் கற்பனைத் தொண்டர் இப்பொழுது வடிவு பெற்று எதிரே வருவது போல் அச் சிறிய பெருந்தகையார் உணர்ந்தார் என்று சேக்கிழார் கூறுகிறார். இவ்வாறு கவிஞர் கூறுவது ஏனைய கவிஞர்கள் கூறுவது போன்ற புனைந்துரை என்று விட்டுவிடக் கூடாது. பக்தி அனுபவம் (Mystic experience) நிறைந்த ஒருவர்தாம். இவ்வாறு கூறமுடியும். திருஞான சம்பந்தர் பெற்ற அனுபவத்தை அவருக்குப் பின்னர் ஐந்நூறு ஆண்டுகள் கழித்து வாழும் ஒருவர் பெறுகிறார் என்றால் இருவருக்கும் பொதுத்தன்மை ஒன்று இருத்தல் வேண்டும். அந்தப் பொதுத்தன்மைதான் பக்தி என்பது. சேக்கிழார் ஏனைய காப்பியக் கலைஞர் போன்றவர் அல்லர்: