பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாவது சுவை 5 0 7 அக்காப்பியக் கவிஞர்களிடம் பக்தியும் இருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் முதலிற் கவிஞர்கள்; பக்தியும் பெற்றிருந்தனர். ஆனால் சேக்கிழார் முதலில் பக்தர்; அடுத்துக் கவிஞராகவும் விளங்கினவர். பிறரைப் பொறுத்தமட்டில் அவர்கள் கவிதைச் சிறப்பில் பக்தியும் காணப் பெறும், ஏனைய சுவைகளும் காணப் பெறும். சேக்கிழார் பக்தியில் கவிதையும் காணப் பெறும். இன்னுங் கூறுவேண்டுமாயின் எட்டுச் சுவைகளுள் எந்தச் சுவையை அவர் பாடினாலும் அதில் பக்திச் சுவை கலந்து தலைதுாக்கியே நிற்கும். இதனைப் புராணம் முழுவதிலும் காணமுடியும். எனவே இதனைச் சற்று விரிவாகக் காண்பதால் அவருடைய பக்தி கலந்த கலைத் திறமையை நன்கு அறிய முடியும். தொல்காப்பியனார் கூறும் எட்டுவகைச் சுவைகளாவன: நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்பனவாகும். - காப்பியத்தில் நகைச்சுவை நகைச் சுவையை அதிகம் பாடுவதற்குச் சேக்கிழாருக்கு வாய்ப்பு இல்லை. ஒன்றிரண்டு இடங்களேயாயினும் அவற்றை ஒப்பற்ற முறையில் கையாள்கிறார். நம்பியாரூரர் திருமணப் பந்தலில் கிழவர் ஒருவர் புகுகின்றார். மிகவும் பயந்தவர் போல நடித்துக் கொண்டு, 'ஆவது இது கேண்மின் மறையோர் என் அடியான் இந் நாவல்நகர் ஊரன் இதுநான் மொழிவது..... ' என்று கூறினார். இதனைக் கேட்ட அனைவருக்கும் வெகுளியை விட மிகுதியாக நகையே பிறந்ததாம். நகை பிறக்கக் காரணமாக அமைவனவற்றுள் பேதைமை, மடமை என்ற இரண்டைத் தொல்காப்பியங் கூறுகிறது. இங்குப் பேதைமை, மடமை என்ற இரண்டும் இருப்பதாக மறையவர்கள் எண்ணிச் சிரிக்கின்றார் doorsTip. - 'என்றான் இறையோன் அது கேட்டவர் எம்மருங்கும் நின்றார், இருந்தார் ‘இவன் என் நினைந்தான் கொல்' என்று சென்றார் வெகுண்டார் சிரித்தார் திருநாவ லூரன் 'நன்றால் மறையோன் மொழி என்று எதிர்நோக்கி நக்கான்' 1 & 'ஆகில் அந்தணர்கள் வேறு ஒர் அந்தணர்க்கு அடிமையாதல் '