பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 0 8 பெரியபுராணம்- ஓர் ஆய்வு என்பது நாட்டு நடைமுறையில் இல்லாத ஒன்று. எனவே அதனைக் கூறியவனுடைய பேதைமை, மடமை என்பவை காரணமாக அவர்கட்கும், திருநாவலூரருக்கும், கிழவன் கூறிய சொற்களைக் கேட்டு நகை பிறந்தது என்கிறார் ஆசிரியர். நகைச்சுவை பிறப்பதற்கு உரிய நிலைக்களன், சூழ்நிலை, பாத்திரப் படைப்பு என்பவை அனைத்தும் சிறப்புற அமைக்கப் பட்டுவிட்டமையின் இப்பகுதி இந்தச் சுவைக்கு நல்லதோர் எடுத்துக் காட்டாகும். ஆனால் பாடுபவர் சேக்கிழார் என்பதை மறந்துவிடலாகாது. ஏனையோர் பாடலாயின் இச்சுவையை அனுபவித்துவிட்டு மேலே செல்லலாம். ஆனால் இவருடைய பாடலாகலின் நின்று நிதானித்து வினா எழுப்பினால் நல்ல பயன் விளையும். இப்பாடலையும் இதற்கு முந்தைய பாடலையும் மேலாகப் பார்க்கையில் திருநாவலுாரரும், அந்தணர்களும், நகைச்சுவையை அனுபவித்தவர்கள் என்றாகிறது. இச்சுவை பிறக்கக் காரணமான பேதைமையுடன் கூடிய சொற்களைக் கூறியவன் வந்த அந்தணன் என்பது தெரிகிறது. இப்பொழுது இதனை அப்படியே மாற்றி வைத்துப் பார்க்கலாம். 'இந்நாவலூரன் என் அடியான்' என்று கூறினவன் யார்? என்று கூறவந்த இடத்தில், 'தேவரையும், மால்அயன் முதல் திருவின் மிக்கோர் யாவரையும் வேறடிமையா வுடைய எம்மான்' 20 என்கிறார். இவ்வாறு கூறியவன் யார் என்பதை அந்தணர்களும் நாவலுரரும் அறிய மாட்டார்கள். ஆனால் நாம் அறிவோம். மேலும் தன் வழக்கைக் கூறும்பொழுதே மறையவன் குறிப்பாக ஒரு சொல்லைக் கூறுவதை யாரும் கவனிக்கவில்லை. 'ஆவது இது கேண்மின் மறையோர் என் அடியான்இந் நாவல் நகர் ஊரன் இது நான் மொழிவது என்றான்' ' நாவலுரரின் பாட்டன் தந்த ஒலை உள்ளது என்று பின்னர்க் கூறும் இம்முதியவன் 'இது நான் மொழிவது' என்று கூறுவதன் நோக்கம் யாதாக இருக்கும்? அங்குள்ளவர் ஒருவருக்குக்கூட இம்முதியவன் யார், எந்த ஊரான் என்பது தெரியாது என்பது வெளிப்படை. அப்படியிருக்க, 'நான் மொழிவது!’ என்று ஏன் கூறுகிறான்? யாராவது ஒருவரேனும் இவ்வாறு ஆணையிடும் முறையில் பேசுகிறானே! இவன் யாராக இருப்பான்?' என்று