பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாவது சுவை 509 நினைத்துப் பார்க்கக்கூட இல்லை. அவ்வளவு மடமையும் பேதைமையும் அவர்களிடம் நிறைந்துள்ளது. எனவே பேதை மையும் மடமையும் மறையோன் கூறிய சொற்களில் இருப்ப தாகக் கருதி அவர்கள் சிரித்தார்கள். ஆனால் இவை இரண்டும் முதியவன் கூறிய சொற்களில் இல்லை; அவனை இன்னான் என்று புரிந்து கொள்ள முடியாமல், அவன் கூறிய சொற்களில் அதுவும் 'நான் மொழிவது' என்ற சொற்களின் உட்பொருளை அறிய முடியாமல் சிரித்தமையின் பேதைமை, மடமை என்பன சிரித்த அந்தணர்களிடமே இருந்தது என்பதையும் கவிஞர் குறிப்பாகப் பெற வைக்கின்றார். பேசும் பாத்திரங்களில் ஒரு பாத்திரம், அறியாமல் பேசுவதன் உட்பொருளை, அதனைக் கேட்கும் நாம் அறிந்து கொள்ளும் முறையில் உரையாடலை அமைப்பதை மேனாட்டுத் திறனாய்வாளர் நாடக அங்கதம் (Dramatic irony) என்று கூறுவர். முதலில் இவர்கள் சிரித்தார் கள் வந்தவனைப் பைத்தியக்காரன் என்று கூறி இறுதியில் இவர் களைப் பைத்தியக்காரர்களாக்கிவிட்டு வந்தவன் சிரித்தான். வந்தவனை இன்னான் என்றறியாத இவர்கள் தங்கள் மடமை யால் இவனை எள்ளி நகையாடினார்கள். காப்பியப் புலவர் இங்குப் புகுத்தும் நகைச்சுவையில் இத்தனைக் கருத்தாழமும் நாடக அங்கதமும் அமைந்திருக்கக் காணலாம். நகைச்சுவை வைத்துப் பாடுவது எளிதாகும் ஆனால் அதனுள்ளும் ஆழமான கருத்தமையப் பாடுவது கடினம். சுந்தரர் திருவொற்றியூரில் சங்கிலியாரைக் கோயிலில் கண்டார். முன்னைத் தொடர்பால் அவர்பால் காதல் கொண்டார். இப் பெருமக்கள் எதனை விரும்பினாலும் இறைவனிடமே கேட்டுப் பெறும் இயல்புடையவர்களாகலின், ஒற்றியூரில் புற்றிடங் கொண்டாரைப் பணிந்து சங்கிலியை மணம் முடித்துத் தருமாறு சுந்தரர் வேண்டுகிறார் என்று பாடவந்த சேக்கிழார் நகைச்சுவை பொருந்த ஒரு பாடலை அமைக்கின்றார். 'மங்கை ஒருபால் மகிழ்ந்ததுவும் அன்றி மணிநீர் முடியின் கண் கங்கை ஒருபால் கரந்தருளும் காதலுடையீர், அடியேனுக்கு இங்கு நுமக்குத் திருமாலை தொடுத்தென் உள்ளத் - தொடை அவிழ்த் திங்கள் வதனச் சங்கிலியைத் தந்தென் வருத்தம் தீரும் ' என்ற இந்தப் பாடல் முதல் இரண்டடிகளில் நகைச்சுவை நிரம்பி மிளிர்கின்றது. ஆனால் ஏன் இவ்வாறு கூறுகிறார்? என்ற வினாவை எழுப்பினால் சுவையான விடை கிடைக்கும்.