பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 i () பெரியபுராணம்- ஓர் ஆய்வு இறைவன் உதவிகொண்டு திருவாரூரில் பரவையை மணந்து இன்பமாக வாழும் சுந்தரர் மறுபடியும் ஒரு பெண்ணைத் தரவேண்டும் என்று கேட்டல் சற்று அதிகமானதுதான். இந்நிலையில் இவர் தோழராகிய இறைவன் 'உனக்குத்தான் ஏற்கெனவே திருமணம் ஆகியுள்ளதே! அப்படியிருக்க ஏன் இந்த ஆசை?' என்று ஒரு வேளை கேட்டுவிடலாம் அல்லவா? அவ்வாறு கேட்கமுடியாமல் செய்ய ஒரே வழி 'நான் கேட்டது ஒருபுறம் இருக்கட்டும், நீயே இரண்டாவது மனைவி ஒருத்தியை மறைவாய்த் தலையில் வைத்துள்ளாயே!” என்று கூறுவதுதான். வரப்போகும் வினாவை எதிர்பார்த்து அதற்கும் சேர்த்து விடை கூறுபவர்போல 'பாகத்தில் ஒருத்தியை வைத்தது போதாதென்று தலையிலும் ஒருத்தியை மறைத்து வைத்துள்ளவரே!” என்று விளிப்பது கருத்துடை அடையாகும். அதைவிடவும் அதில் ஒரு சிறப்பு உள்ளது. கரந்தருளும் காதல் உடையீர்! என்று கூறும் பொழுதே 'நான் உம்மைப் போல் மறைவாக வைத்துவாழ விரும்பவில்லை. ஊரறிய மணஞ் செய்து கொள்ளவே விரும்பு கிறேன்' என்ற கருத்தும் தொக்கி நிற்கக் காண்கிறோம். இறைவனைத் தோழனாகக் கொண்டு வாழ்ந்தவர் சுந்தரர். ஆகலின் நகைச்சுவைக்கு அவருடைய வரலாற்றில்தான் அதிக இடம் தரப்பெறுகிறது. பல சமயங்களில் ஒருவருடைய பேச்சு மட்டுமில்லாமல் செயலும் நகைப்புக்கு இடம் ஆகிறது. அந்தச் செயலின் ஆழம் தெரியாமல் ஒருவர் செய்ய முற்பட்டால் அங்கு நகைச்சுவை தோன்றுவதைவிட ஐயோ! பாவம்' என்ற இரக்கந் தோன்றிவிடும். அவ்வாறில்லாமல் ஒருவர் தான் செய்யப்போகும் செயலின் உட்பொருளை அறிந்திருந்தும், அது பைத்தியக்காரத்தனம் என்று பிறர் எடுத்துக் கூறியும், அதுபற்றிக் கவலைப்படாமல், 'நான் இதோ செய்கிறேன் பார்!’ என்று செய்யத் தொடங்கினால் இரக்கம் தோன்றுவதற்குப் பதிலாக நகைச் சுவைதான் தோன்றும். திருமுதுகுன்றத்தில் (விருத்தாசலம்) இறைவனிடம் பொன் வேண்டிப் பெற்ற சுந்தரர் அதனை எடுத்துச் செல்லாமல் 'அருளும் இக் கனகமெல்லாம் அடியனேற்கு ஆரூர் உள்ளோர் மருளுற வியப்ப ஆங்கே வரப் பெற வேண்டும்....... * 23 என்று சிறுபிள்ளைபோல் இறைவனிடம் வேண்டினார். இங்கே பெற்றதை அங்கே கொணர்ந்து தரல் வேண்டும் என்றுதான் வேண்டினாரேயன்றி, அடுத்து இறைவன் இன்னமுறையில்