பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 பெரியபுராணம்- ஓர் ஆய்வு 'விறலியர் முதலிய பாடற் குழுவினர் (ministrels) கற்றறிதல் என்பது வாய்மொழி மூலமே. அதாவது பிறரைப் பார்த்துச் செய்வது, பாடல் முறையை மனனஞ் செய்வது என்பதைத் தக்கமுறையில் எடுத்துக் காட்டியாயிற்று. கருத்தை வெளிப்படுத்த வாய் கருவியானது போலப் புரிந்துகொள்ளக் கருவியாய் அமைந்தது காதுகளேயாகும். கற்றலைக் குறிக்கும் 'கேள்வி' என்ற சொல் கேள் என்பதிலிருந்து பிறந்ததாகும். கற்றல் என்பது வாய்மொழி மூலமே என்பதை விளக்க இ போதுமானது. (கற்றல், கேட்டல் என்று கூறுவதன் ಗ್ಲಿಕ್ಲಿಕ್ಟಿ ஏட்டில் கற்பதுடன் செவிவழிக் கேட்டும் கற்கவேண்டும் என்பதை உணர்த்தவேயாம் என்பதை இவ்வாசிரியர் கவனிக்கத் தவறி விட்டார்) கவிஞர்களின் கல்வித்தரம் குறிப்பிடும் பொழுது கேள்வி என்ற சொல்லை மிகுதியும் பயன்படுத்துவதே இதனை விளக்குவ தாகும். நெடுஞ்செழியனால் மிகுதியும் பாராட்டப்பட்டவன் மாங்குடி மருதன் என்ற புலவன். மாங்குடி மருதனைக் கேள்வி வல்லோன் என்று குறிப்பிடுத்தல் ஆயத்தக்கது.' இவற்றுடன் நில்லாமல் ஆசிரியர் கைலாசபதி பல படிகள் மேலே சென்று கிரேக்கக் கவிஞர் ஹோமர்பற்றி மில்மன் பேரி (Millman Parry) செய்த ஆய்வுகளைத் தம் ஆய்வுக்கு அளவு கோலாகக் கொள்கின்றார். 'ஹோமரின் கவிதைகட்கு மில்மன் பேரி வகுத்த சட்டங்கள் அதாவது வாய்மொழி மரபுப் பாடல்களை இயற்றுபவர்கள் குறிப்பிட்ட சில உத்திகளை முதலீடாக வைத்துக்கொண்டு பரம்பரை பரம்பரையாக இந்த மரபுக் கவிதைகளை யாத்தனர் என்ற சட்டங்கள், பழைய தமிழ்க் கவிதைகளைப் பொறுத்த மட்டில் முற்றிலும் பொருந்துவதாகும். பாணர்கள் ஆக்கிய இப் பாடல்கள், சில உத்திகளை விடாமல் கையாண்டன. சில சொற்களையும், சொற்றொடர்களையும் வழிவழியாகக் கையாண்டன. கருத்துக்கள், சில கருத்துத் தொகுப்புக்கள், என்பவற்றுடன் பலவகைக் கவிதைகளில் வெளிப்படும் வாலாய மான கருதுகோள்களைக் கையாண்டன. பாணர் பாடிய தமிழ்க் கவிதைகளை இங்குக் கூறிய முறையில் ஆய்வதே இப் பகுதியின் நோக்கமாகும். மிக வளர்ச்சியடைந்த வாய்மொழி இலக்கிய அடிப்படை இங்கிருந்தது என்பதை இதுவரை யாரும் கவனிக்க வில்லை.” -- 'இக்கால அறிஞர் பலரும் தமிழ் இலக்கியம்பற்றிய தம் ஆய்வுகளில் அவ் விலக்கியம் எழுதப்பெற்ற இலக்கியம் என்று