பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாவது சுவை 5 1 I தருகிறேன் என்று கூறியதை ஏற்க அவர் தயாராக இல்லை என்பது நன்கு விளங்குகிறது 'அங்கே வரப்பெற வேண்டும்' என்று இவர் கேட்டவுடன் ஆண்டவன், S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S - - - - - * * * * * * * செழுமணி முத்தாற்றிட்டுப் பொருளினை முழுதும் ஆரூர்க் குளத்திற் போய்க் கொள்க' ' என்று கூறுவான் என்று இவர் சற்றும் எதிர்பார்க்க வில்லை. முன்னர்க் குண்டையூரில் பெற்ற நெல்லைப் பூதகணங் கள் மூலம் திருவாரூரில் கொண்டு சேர்த்ததுபோல இதுவும் நடைபெற வேண்டும் என்றுதான் ஆரூரர் எதிர்பார்த்தார். ஆனால் விளையாட்டுடைய முதுகுன்றநாதர், 'ஒடும் ஆற்றில் இப் பொன்னைக் கொட்டிவிட்டு. உன் ஊர்க் குளத்தினில் சென்று பெறுக’ என்று கூறியதை ஆரூரர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்நிலையில் சுந்தரர் அப்படியே செய்திருப்பாராயின் அவர் மனைவியாரின் நகைப்புக்கு ஆளாகி இருக்க மாட்டார். இங்கு சுந்தரர் ஒரு தவற்றை செய்கிறார். அதன் பயனாகவே நகைப்புக்கு ஆளாகிறார். தம்பிரான்தோழர் ஆயினும் இறையருளில் ஐயம் வந்துவிட்டால் அதற்குரிய தண்டனையை அனுபவிக்க வேண்டும் இறைவன் இவ்வாறு கூறியவுடன் அப்படியே செய்யாமல் ஆரூரர் இறைவனுடைய திருவிளையாட்டில் ஐயங்கொண்டவர் போலப் பொன்னை ஆற்றில் போடுமுன் அதே பொன் அங்கு வருகிறதா என்று பார்ப்பதற்காகக் கையிலிருந்த பொன்னில் மச்சம் வெட்டி வைத்துக் கொண்டு மணி முத்தாற்றில் போட்டு விட்டார். அதுமட்டுமன்று; அவருடைய சந்தேகம் வலுவாகி நின்றது என்றும் சேக்கிழார் குறிப்பால் பெற வைக்கின்றார். 'என்றுதம் பிரானார் நல்கும் இன்னருள் பெற்ற பின்னர் வன்றொண்டர் மச்சம் வெட்டிக் கைக்கொண்டு மணிமுத்தாற்றில் பொன்திரள் எடுத்து நீருள் புகவிட்டுப் போதுகின்றார் அன்று என்னை வலிந்து ஆட்கொண்ட அருள் இதில் - அறிவேன் என்று ' எப்பொழுதும் இவர் வேண்டியன அனைத்தையும் இறைவன் தானே தருகிறான். இப்பொழுதும் அதே இறைவன்தானே ஆற்றிலிட்டுக் குளத்தில் பெறுக என்று கூறிவிட்டான். அப்படி இருக்கத் திடீரென்று அதில் ஐயுற்று மச்சம் வெட்டி வைத்துக்