பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 12 பெரியபுராணம்- ஓர் ஆய்வு கொள்ள வேண்டிய காரணம் யாது? எந்த ஒன்றிலும் ஐயம் என்பது தோன்றிவிட்டால் அது விரைவில் வளர்ந்துவிடும் என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக் காட்டாகும். இதே பொன் அங்கு வருமா?’ என்ற ஐயம் வந்துவிட்ட பிறகு, 'ஒருவேளை வராமற் போனால் என்ன செய்வது?’ என்ற நினைவும் தோன்றி விட்டதுபோலும்! அதனாலேயே இவர் என்னை அன்று தாமே வந்து வலிய ஆட் கொண்டதன் உண்மையை இதன் மூலம் அறிவேன்' என்று கூறும் மனநிலை வந்துவிட்டது. இந்த நிகழ்ச்சியை இவ்வளவு விரிவாகப் பாடுவதன் மூலம் இந்த மாபெரும் தொண்டர்களும் ஒரோவழிச் சாதாரண மனிதர் களின் மனநிலையை அடைந்துவிடுகிறார்கள் என்பதைக் கவிஞர் விளக்குகிறார். பக்தர்களையும் அவர்கள் வாழ்க்கையையும் தம் அனுபவத்தாலேயே நன்கு தெரிந்து கொண்டிருந்த சேக்கிழார் இதனையும் அறிந்து வைத்திருந்தார். தொண்டர்கள், பக்தர்கள் என்பவர்கட்கும்கூட வாழ்க்கையில் என்றோ ஒரு நாள், ஒரு வினாடி இத்தகைய மனநிலை வந்துதான் தீரும் போலும் மானுட உடம்பெடுத்து இந்த உலகில் பிறந்தவர்கள் யாவராயினும் இந்தச் சட்ட திட்டங்களிலிருந்து மீற முடியாது என்பதை அறிவிக்கவே இயற்கை இதனைச் செய்கிறது. இவ்வாறு ஐயம் வந்துவிட்டால் அதற்குரிய தண்டனையை அனுபவிக்கத்தான் வேண்டும் என்பதை இந் நிகழ்ச்சியின் பிற்பகுதி விளக்குகிறது. ஆற்றில் போட்டபிறகு பல தலங்களை யும் வணங்கிக் கொண்டு ஆரூரர் திருவாரூர் வந்து மனைவியிடம், நாயனார் முதுகுன்றர் நமக்களித்த நல்நிதியம் தூயமணி முத்தாற்றில் புகவிட்டேம் துணைவரவர் கோயிலின் மாளிகை மேல்பாற் குளத்தில் அவர் அருளாலே போயெடுத்துக் கொடுபோதப் போதுவாய்....' என்றவுடன் 'என் சொன்னவா?’ என்று மனைவியார் முறுவலுடன் கேட்டாராம். குளத்தில் எடுத்துத் தருவது பொய்யாது எனக் கூறி அவரையும் அழைத்துவந்து கரையில் நிறுத்திவிட்டுக் குளத்தில் இறங்கித் தேடினார்; பொன் ஏதும் கிட்டவில்லை. இந்த நிலை யில் இவர் மாட்டு உயிரையே வைத்திருந்த மனைவியார் நகைச் சுவைக்கு உதாரணமாக ஒரு தொடரைப் பயன்பத்தினார். ‘.......................... ஆற்றினில் இட்டுக் குளத்தில் தேடுவீர்! அருள் இதுவோ? சாற்றும்' " என்று கூறிச் சிரித்து விட்டார்.