பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாவது சுவை 5 1 3 இப்பொழுது ஆரூரருக்குப் பொன் வரவில்லையே என்ற வருத்தத்தைவிட மனைவியார் சிரித்துத் தம் மானத்தை வாங்குவதே பெரிதாகப் பட்டுவிட்டதாம். 'முன் செய்த அருள்வழியே முருகலர்பூங் குழற்புரவை தன் செய்ய வாயில் நகைதாராமே தாரும்.... ' என வேண்டினார், அப்பொழுதும் பொன் வரவில்லையாம். 'பொன் செய்த மேனியினர்' ' என்று தொடங்கும் இப் பதிகத்தைக் கூர்ந்து பார்த்தால் ஒரு புதுமையைக் காணலாம். பொன்னை எடுத்துத் தருகிறேன் என்று மனைவியை அழைத்து வந்து கரையில் அமர்த்திவிட்டு வழக்கம் போல் ஒரு பதிகத்தைப் பாடத் தொடங்கிக் குளத்துள் இறங்கித் தேடுகிறார் தொண்டர். பதிகத்தின் முதற்பாடலின் இறுதி அடியில் 'பரவை கரையில் இருக்கிறாள். என் துயரம் கெடும்படி உடனே பொன்னைத் தருக" என்ற கருத்தில், - ‘மின் செய்த துண்ணிடையாள் பரவையிவன் தன் முகப்பே என் செய்தவாறு அடிகேன்! அடியேன் இட்டணங்கெடவே ' என்று ஏன் பாடவேண்டும்? தேடிக் கிடைக்காவிடின் அல்லவா, 'என் துயர்கெட உடனே தருக' என்று பாட வேண்டும். அடுத்த பாடலில், - . . 'உம்பரும் வானவரும் உடனே நிற்கவே எனக்குச் செம்பொன்னைத் தந்தருளித் திகழும் முதுகுன்றமர்ந்தீர்! வம்பமருங் குழலாள் பரவையிவன் வாடுகின்றான் எம்பெருமான் அருளிர் அடியேன் இட்டணங்கெடவே ' என்று பாடுவதன் கருத்து யாது? தேவர்கள் சாட்சியாக இறைவன் தந்தான் என்று ஏன் கூறவேண்டும்? பரவை வாடுகின்றாள் என்று ஏன் பாடவேண்டும்? இரண்டாம் பாடல் தொடங்கி ஒன்பதாம் பாடல் வரைப் பரவை வருந்துகிறாள் என்று ஏன் பாடவேண்டும்? பரவையார் உண்மையிலேயே இதை நம்பவில்லையா? ஒவ்வொரு முறையும் கணவர் இறைவனிடம் பொன் பெற்று வருவதை நன்கறிந்தவராகிய பரவையார் இதனை நம்பாமல் இருக்கக் காரணம் இல்லையே! பின்னர் ஏன் வருந்துகிறார்? முதற்பாடலில் தொண்டர் 'என் இட்டளங்கெட அருள்வாய்!” என்று கூறியது தான் பரவையாருடைய மனத்தில் வ்ருத்தத்தை உண்டாக்கி யிருத்தல் வேண்டும். - -