பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 14 பெரியபுராணம்- ஓர் ஆய்வு இட்டளம் என்ற சொல்லுக்கு மனத்தளர்ச்சி, துன்பம் என்ற பொருள்கள் உண்டு. எடுத்த எடுப்பிலேயே என் துன்பங் கெட அருள்வாய் என்று பாடியதால் இவர் மனத்தில், உறுதிப் பாட்டில், பக்தியில் ஏதோ கோளாறு ஏற்பட்டுள்ளது என நினைத்துத்தான் அம்மையார் வருந்தினார் என்று கொள்ள வேண்டியுள்ளது. எட்டாவது பாடல் முடிகின்றவரைப் பொன் அகப்படவில்லை என்று சேக்கிழார் பாடுகிறார். ஒன்பதாவது பாடல் முடியவும் பொன் கிடைத்தது. இந்தக் காலதாமதம் ஏன் ஏற்பட்டது? என்பதை அறிவிக்கவே முன்னர் இவர் ஐயுற்று மச்சம் வெட்டி வைத்துக் கொண்டதையும், 'என்னை ஆட்கொண்டது உண்மையா? என்பதனையும் இதன்மூலம் அறியப்போகிறேன்' என்று நினைத்தார் என்பதையும், கவிஞர் கூறினார். இறையருளில் முழு நம்பிக்கை உடையவருக்கு இந்த ஐயம் வரக்கூடாது; ஆனால் வந்துவிட்டது. இந்த ஐயம் வந்ததேகூடத் தன் மனத்தளர்ச்சி யினால்தான் என்று பக்தர் கருதியிருக்கவேண்டும். அந்தத்தளர்ச்சி யாதாக இருக்கும்? இறைவன் தன்மாட்டுக் காட்டும் அருள் ஒருவேளை குறைந்துவிட்டதோ? என்ற ஐயம் இவர் மனத்தில் தோன்றியிருக்கலாம். மனிதர்கட்கு இயல்பாக வருகின்ற இந்த ஐயம் இந்தத் தொண்டருக்கும் வந்திருத்தல் வேண்டும். உண்மை யில் இறைவன் கருணை முன்போல் தன்னிடம் பாய்கின்றதா என இவர் ஐயுற்று அதனைத் தெளிவுப்படுத்திக் கொள்ளவே இந்தச் சோதனையை நடத்தி இருத்தல் வேண்டும். பொன் வரவில்லை என்ற கவலையைவிட அவனருள் தம்மாட்டு முன்புபோல் பாய்வில்லையோ என்ற தளர்ச்சி வலுப்படத் த்ொடங்கியது. இதனைப் பரவையும் அறிந்திருத்தல் வேண்டும். இவ்வாறு தம் கணவன் இறைவன் திருவருளில் ஐயுற்றது சரியல்லவே என நினைந்து மனைவியார் கரையில் இருந்து கொண்டு வருந்தினார் என்று பாடுகிறார். கணவன், மனைவி என்ற இருவருக்கும் பொன் வரவில்லையே என்ற கவலை இல்லை. தன்பால் பெருகும் திருவருள் குறைந்துவிட்டதோ எனக் கணவர் வருந்துகிறார்; மனம் தளர்வுறுகிறார். இவ்வாறு ஐயுறுவதும் பெருந் தவறு என்று கருதிய மனைவியார் கணவனின் இந்த ஐயங்கண்டு வருந்து கிறார். இருவரும் வருந்தினர்; ஆனால் வேறு வேறு காரணங் களுக்காகவே. - பக்தர்கள் வாழ்க்கையில் ஒரோவழி நிகழும் இத்தகைய இக்கட்டுகளை மற்றொரு பக்தராகிய சேக்கிழார்தாம் அறிய முடியும். தொண்டர்தம் வாழ்க்கை முறையை உலகறிய எடுத்துக் கூறவந்த பெரியார் இந்த இடர்ப்பாடுகளையும் நாம் அறிய வேண்டும் எனக் கருதி நுண்மையான இக் கருத்துக்களை