பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாவது சுவை 5 15 ஏதாவதொரு நிகழ்ச்சியில் வைத்துக் காட்டிச் செல்கிறார். இம்மாதிரி இடங்களில் இறைவன் ஏன் பொன்னைத் தராமல் காலந் தாழ்த்தான் என்ற வினா நியாயமானதாகவும் படலாம். ஆனால் இறைவன் செயலை ஆய்ந்து காண யாருக்கும் உரிமை இல்லை. இப்பெருமக்களுங்கூட இந்த ஆராய்ச்சியில் ஈடுபடுவதில்லை. அதற்குப் பதிலாகத் தாம் கேட்டது உடன் கிடைக்கவில்லை என்றால் தம்மிடம் ஏதோ குறை இருக்க வேண்டும்; அதனால்தான் கேட்டது கிடைக்கவில்லை என்ற முடிவுக்கு வருகின்றனர். சிற்றறிவுடைய சாதாரண மக்கள் இதுபோன்ற சந்தருப்பங்களில் தம் குறையை நினைந்து பார்ப் பதில்லை. அதற்குப் பதிலாகக் கடவுளை ஏசுகின்றனர். நகைச் சுவையைக் காட்டுவதற்கு வாய்ப்பாக இந்த நிகழ்ச்சிகளைக் கூறும் முறையில் மிகப் பெரிய தத்துவக் கருத்துக்களையும் கூறிவிடுவது சேக்கிழாருக்குக் கைவந்த கலையாகும். அழுகைச் சுவை அடுத்துள்ள சுவை அழுகை என்பதாகும். இளிவு, இழவு, அசைவு, வறுமை என்ற காரணங்களால் இச்சுவை பிறக்கும் எனத் தொல்காப்பியம் கூறுகிறது. தொண்டர்கள் இங்குக் கூறப்பெற்ற எந்தக் காரணத்திற்காகவும் அழும் இயல்புடையவரல்லர். எனவே பிறர் அழும் நிலையில் அந்த அழுகையைப் போக்கத் தொண்டர்கள் என்ன செய்தார்கள் என்பதைத்தான் பெரியபுராணத்தில் காணமுடியும். தொண்டர்களும் அழுவ துண்டு; ஆனால் அதுமேலே காட்டப் பெற்ற நான்கு காரணங் களால் அன்று. தம் குறையை நினைந்து அழும் இயல்பு தொண்டர்கட்கு உண்டு. ‘............. ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே ' என்பார் மாணிக்கவாசகர், சிவகாமியாண்டார் அழுகை பெரியபுராணத்துள் வருபவர் அழுகைச் சுவையை எடுத்துக் காட்டுக்கள் இரண்டின் மூலம் காணலாம். சிவகாமியாண்டார் அன்றாடம் நந்தவனம் சென்று, மலர் பறித்துவந்து மாலை