பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 I 6 பெரியபுராணம் .ஒர் ஆய்வு கட்டி இறைவனுக்குச் சாத்தும் பணியை மேற்கொண்ட ஓர் அன்பர். கருவூரில் வாழ்ந்த அவர் ஒரு நாள் மலர் பறித்துக் குடலையைத் தலைக்குமேல் தூக்கிப் பிடித்து வரும் பொழுது புகழ்ச்சோழ மன்னனுடைய பட்டத்து யானை அக் குடலையைத் துதிக்கையால் பிடுங்கி எறிந்து பூக்களைக் காலால் துவைத்து விட்டது. இப்பொழுது அந்த அன்பர் இறைவனுக்குரிய பூவை, யானை சிந்திவிட்டதே என்று அழுகிறார். அவருடைய வயது முதிர்ந்த நிலையில் யானையை எதிர்க்கவோ முடியாது. சாதாரண மனிதராகலின் அரசன் யானையையோ பாகர் களையோ ஒன்றுஞ் செய்ய முடியாது. எனவே அவர் அழுகை அசைவில் பிறந்த தாகும். ' களியானையின் ஈர் உரியாய்! சிவதா! எளியார் வலியாம் இறைவா! சிவதா' 'ஆறும் மதியும் அணியுஞ் சடைமேல் ஏறும் மலரைக் கரிசிந் துவதே? 'நெடியோன் அறியா நெடியார் அறியும் படியால் அடிமைப் பணிசெய்து ஒழுகும் அடியார்களில் யான் ஆரா அணைவாய்? முடியா முதலாய்! எனவே மொழிய.....' இந்த அழுகை சாதாரண மக்களின் அழுகையினின்று மாறுபட்ட தாகும். தன்னலத்தின் அடிப்படையில் தோன்றிய துயரமன்று இது. தம் கடமையைச் செய்ய முடியாமையின் தோன்றிய அவலம். மேலும் தீமை செய்தவர்களைத் தடுத்து நிறுத்த முடியாமையிற் பிறந்த அவலம். 'எளியார் வலியாம் இறைவா' என்று அவர் கதறும்பொழுது தன்கட்டோன்றிய அசைவுபற்றிய அழுகையாயினும் அந்த அசைவு கடமையை நிறைவேற்ற முடியாமற் செய்துவிட்டதே என்பதற்காகவே பிறந்ததாகும் அதிகாரம் எளியாரை வாட்டும் பொழுது எளியார் முறையிடக் கூடிய ஒரே இடம் இறைவன்தான். தலைமை அமைச்சராய் இருந்து தமிழகம் எங்கும் சுற்றிவந்த பெருமகனாருக்கு எளியார் பலர் துயருறும் நிகழ்ச்சிகள் பல கண்ணிற்பட்டிருக்கும். அரசும் அதிகாரமும் இவற்றை அறியாமல் இருக்கலாம்; கவனிக்கவும் துடைக்கவும் முயலாமலும் இருக்கலாம்; அல்லது கவலைப் படாமற்கூட இருக்கலாம். அத்தகைய நிலையில் எளியார் துயரை