பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாவது சுவை 5 17 இறைவன்தான் போக்கமுடியும் என்ற கருத்தைக் கவிஞர் கூறுகிறார். மனுநீதியின் வரலாற்றில் மாநிலங்காவலன் தன் கீழ் வாழும் உயிர்கட்கு உண்டாம் ஐந்து வகையான துன்பங்களையும் போக்கிக் காக்க வேண்டிய கடப்பாடுடையவன் என்பதை வலியுறுத்துகிறார். ஆனால் எல்லா மன்னரும் மனுநீதியாகவோ, புகழ்ச்சோழராகவோ இருத்தல் இயலாத காரியம். எனவேதான் இந்த அவலச் சுவையை வெளிப்படுத்தும் இடத்தில் 'எளியவர் மனந்தளர வேண்டியதில்லை; அவர்கட்கு வலிய துணையாக இறைவன் உளன் என்ற கருத்தைப் பெய்து பாடுகிறார். திரு மருகல் பெண்ணின் அழுகை இனி மற்றோர் இடத்தில் தனிப்பட்ட ஒருவர், தம் சொந்தத் துயரால் அழுகின்றார். தனிப்பட்ட ஒரு பெண் தன் காதலனுடன் 'உடன் போக்கு மேவ, இடைவழியில் அவன் அரவு தீண்டி இறந்து பட, புலம்பி அழுகின்றாள். இறப்பு என்பது நீக்க முடியாதது என்பதை அப் பேதைப் பெண் நன்கறிவாள். ஆனாலும் திருமருகலில் உள்ள இறைவனிடம் தன் துயரை வெளியிடுகிறாள். கொடுப்பாரும் அடுப்பாரும் இன்றித் தனியளாய் நிற்கின்ற அப்பெண்ணுக்கு இப்பொழுது முன்பின் தெரியாத ஊரில் யார் ஆதரவு தரமுடியும்? எனவே எளியார் வலியே இறைவன்தான் என்ற கருத்தில் தன் துயரை இறைவனிடம் கூறி அழுகின்றாள். அப்படிக் கூறி அழும் பொழுதுகூட இறைவன் கருணைக்கு விண்ணப்பஞ் செய்யும் முறையில் அவள் அழுகை வெளிப்படு கின்றது. 'அடியாராம் இமையவர்தம் கூட்டம் உய்ய அலைகடல்வாய் நஞ்சுண்ட அமுதே! செங்கண் நெடியோனும் நான்முகனும் காணாக் கோல நீலவிட அரவணிந்த நிமலா வெந்து பொடியான காமன் உயிர் இரதிவேண்டப் புரிந்தளித்த புண்ணியனே! பொங்கர்வாசக் கடியாரும் மலர்ச்சோலை மருங்கு சூழும் கவின் மருகல் பெருமானே! காவாய்' என்றும்.' 'வந்தடைந்த சிறுமறையோன் உயிர்மேல் சீறி வருங்காலன் பெருங்கால வலயம்போலும் செந்தறுகண் வெள்ளெயிற்றுக் கரியகோலம் சிதைந்துருள உதைத்தருளும் செய்ய தாளா!