பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 18 பெரியபுராணம்- ஓர் ஆய்வு இந்தவிடக் கொடுவேகம் நீங்குமாறும் யான் இடுக்கண் குழிநின்றும் ஏறுமாறும் அந்திமதிக் குழவி வளர் செய்யவேணி அணிமருகல் பெருமானே! அருளாய் என்றும்' என்ற அடிகளில் தன்னுடைய வாழ்வு பாழாகிவிட்டதற்குத்தான் அப்பெண் மனம் உருகிக் கதறுகின்றாள், ஆனால் தன்னலத்தின் அடிப்படையில் தோன்றிய அழுகையாயினும் சேக்கிழார் கையில் அந்த அழுகை புதியதோர் வடிவு எடுக்கின்றது. இரண்டு பாடல் களிலும் இறைவனுடைய கருணையும், எந்தப் பிழை செய்திருப் பினும் அதனை மன்னிக்கும் பான்மையும், தன்பால் அடைக்கலம் என்று வந்தவர்கள் உயிரைக் காப்பதற்காக இயற்கையின் சட்டத்தையும் மீறிக் காட்டும் வள்ளன்மையும் பேசப் பெறு கின்றன. இமையவர் கூட்டம் உய்ய நஞ்சுண்டான். மன்மதன் தவறுபுரிந்தமைக்காகத் தண்டிக்கப்பெறினும் அவன் மனைவியின் வேண்டு கோட்குச் செவிசாய்த்து மனம் இரங்கி அவனைப் பிழைக்கச் செய்தான். இவ்விரண்டு நிகழ்ச்சிகளிலும் தனக்குத் தவறு இழைத்தவர்கட்கும் மனம் இரங்கி மன்னிப்பு அருளி உயிர்ப்பிச்சையும் தந்தான். இரண்டாவது பாடலில் தவறு ஏதும் செய்யாதவனாயினும் விதியின் பயனால் வாணாள் முடிந்துவிட்ட மார்க்கண்டன் விதியின் முடிவு என்று அறிந்திருந்தும் அதனை ஏற்றுக் கொள்ளாமல் சரணம் அடைந்தமையின் உயிர் பற்றவந்த காலன் பரமனால் உதைபட்டான். வணிகனைப் பொறுத்தமட்டில் எத்தவறும் அவன் இழைக்க வில்லை. தன் வாணாள் முடிவுறும் என்று மார்க்கண்டனைப் போல முன் கூட்டியே அறிந்திருக்கவு மில்லை. அறிந்திருப்பின் அவனும் திருவடியே சரணம் என்று பற்றிக் கொண்டிருப்பான் என்பது குறிப்பெச்சம். எனவே இவனும் இறைவன் கருணைக்குப் பாத்திரமானவனே யாவான். அங்கு இரதி வேண்டினதுபோல இங்கு வணிகப் பெண் வேண்டுகிறாள். மேலே கூறிய சான்றுகளுள் யாரும் விடந் தீண்டி இறக்கவில்லையே என்று கூறினால் அதற்கு டைகூறுபவள் போல இறைவனைப் பார்த்து 'நீலவிட அரவணிந்த நிமலா!' என்று விளிப்பது கருத்துடை விளியாகும். எனவே பாம்பின் விடத்தை நீக்குவதும் தன்னை இடுக்கண் குழி நின்று ஏறுமாறு செய்வதும் அவனுக்கு எளிதே என்று கூறி முடிக்க வருபவள் அந்திமதிக் குழவிவளர் செய்யவேணி என்று கூறி அவனுடைய கருணைத் திறத்தை மறுபடியும் பாராட்டு கிறாள். எனவே பெரிய புராணத்தில் அழுகைச் சுவையும் தனிச் சிறப்புடன் இலங்குகிறது.