பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாவது சுவை 5 I S. இளிவரல் சுவை மூன்றவதாக உள்ளது இளிவரல் என்னும் சுவையாகும். இளிவரல் என்பது பண்டைய நிலைமை கெட்டுத் தாழ்நிலை அடைதல். மூப்பு, பிணி, வருத்தம், மென்மை என்பனபற்றி இச் சுவை தோன்றும் என்பர் இலக்கண ஆசிரியர். மாப்பிள்ளைக் கோலத்துடன் இறைவனுடன் தோழமை கொண்டு வாழ்ந்த சுந்தரர் தாம் எப்படி வாழ்ந்தார் என்பதை அவரே தேவாரத்தில் குறிக்கின்றார். தூதனைத் தன்னைத் தோழமையருளித் தொண்டனேன் செய்ததுரிசுகள் பொறுக்கும்... நாதனை. . . . . . . . . . . . . . . . . . . . * 35 என்றும், 'திருவுமெய்ப் பொருளும் செல்வமும் எனக்கு உன் சீருடைக் கழல்கள் என்று எண்ணி ஒருவரை மதியாது உறாமைகள் செய்தும் ஊடியும் உறைப்பானாய்த் திரிவேன்..... ' - என்றும் கூறுவார். இவ்வாறு ஒருவரை மதியாது வாழ்ந்த பெருமான் தம் கண் களை இழந்தபின் பிணியும், மென்மையும் தொடர இறைவனை நோக்கித்தன் பிழை பொறுத்து ஆட் கொள்ளவேண்டும் என்று வேண்டி ஊர் ஊராகச் செல்வதைப் பாடுகையில் சேக்கிழார் சுந்தரராகவே மாறிவிடுகின்றார். திருவொற்றியூர் நாதனை, 'இழுக்கு நீக்கிடவேண்டும் என்று இரந்தே எய்து வெந்துயர்க் கையறவினுக்கும் பழிக்கும் வெள்கி நல் இசைகொடு பரவிப் பணிந்து சாலவும் பலபல நினைவார்......... • 37 என்பது முதலாக முப்பது பாடல்கள் இளிவரல் சுவைக்கு எடுத்துக் காட்டாக உள்ளன. இவற்றுள் காஞ்சியிலும், ஆரூரிலும் அவர் பரவிய நிகழ்ச்சியைக் கூறும் பாடல்கள் இளிவரல் சுவையை மிகுதியும் பெற்றுள்ளன. 35