பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 0 பெரியபுராணம்- ஓர் ஆய்வு 'பிழையுளன பொறுத்திடுவர்' என்றெடுத்துப் பெண்பாகம் விழைவடிவிற் பெருமானை வெண்பாக்கம் மகிழ்ந்தானை இழை எனமா சுணம்அணிந்த இறையானைப் பாடினார் மழை தவழும் நெடும்புரிசை

  • & . . * 38 நாவலுரா மன்னவனார்: '

என்று இவ்வாறு திருவெண்பாக்கத்தில் பாடியதைக் கூறிவிட்டுக் காஞ்சியில் அவர் செயலைக் கூறப்புகுந்து, 'விண்னாள்வார் அமுதுண்ண மிக்கபெரு விடமுண்ட கண்ணாளா! கச்சி ஏகம்பனே! கடையானேன் எண்ணாத பிழை பொறுத்து இங்கு யான்கான எழிற்பவள வண்ணா கண் அளித்தருளாய் என விழந்து வணங்கினார். ' என்று பாடி இடக்கண் பெற்றார் என்கிறார். இறுதியாகத் திருவாரூர் சென்று, வாழ்ந்தமலர்க்கண் ஒன்றால் ஆராமல் மனமழிவார் ஆழ்ந்த துயர்க் கடலிடை நின்று அடியேனை எடுத்தருளித் தாழ்ந்த கருத்தினை நிரப்பிக் கண்தாரும் எனத்தாழ்ந்தார். 'மீளா அடிமை என்றெடுத்து மிக்கதேவர் குலமெல்லாம் மாளாமே நஞ்சுண்டருளி மன்னி இருந்த பெருமானைத் தாளா தரிக்கும் மெய்யடியார் தமக்காம் இடர்நீர் தரியீர் என்று ஆளாந் திருத்தோழமைத் திறத்தால் அஞ்சொற்பதிகம் பாடினார்' " மாப்பிள்ளைக் கோலத்துடன் ஒருவரை மதியாது உறாமை கள் செய்து திரிந்த ஒருவர் தம் பண்டைய நிலைமை கெட்டு, கண்ணிழந்து, கோல்பற்றி வழிகாட்டிச் செல்பவர் கரகரவென இழுக்க அவர் பின் நடந்து செல்லும் நிலை இளிவரல் என்னும் சுவைக்கு ஒப்பற்ற எடுத்துக் காட்டாகும். ஆனால் இங்குக் காட்டப்பெற்ற பாடல்கள் இளிவரல் சுவையுடையன என்றாா அது ஒரு மாபெரும் தொண்டருடைய இளிவரல் என தை மறவாமல் நினைவிற்கொள்ள வேண்டும்.