பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் காப்பியங்களின் தோற்றமும் வளர்ச்சியும் .3 6. I கொண்டே சென்றனர். கற்றவர்களிடை எழுத்தறிவு பழக்கத் தில் மிகுதியாக வரும்பொழுதுதான் இலக்கியம் பழக முடியும் என்கிறார் திரு. வையாபுரிப்பிள்ளை. தமிழ் அறிஞர்களிடம் வாய்மொழி மரபு இருந்தது என்பதை ஏற்றுக் கொண்டாலுங்கூட முனைவர் வித்தியானந்தன் 'தமிழ்க் கவிதைகள் தொடக்க முதலே எழுதப் பெற்று நிலையாய் இருந்துவந்தன” என்று கூறுகிறார்.' இதேபோன்று இவ்வாசிரியர் தொல்காப்பியச் செய்யுளிய லைக்கூடப் பாணர்களுடைய கலையை (வாய்மொழி இலக்கியம்) வளர்ப்பதற்காகவே தோன்றியது என்றுங் கூறுகிறார். வெல்ஷ் மொழியில் வாய்மொழிப் பாடல்கள் பற்றிய இலக்கணங்கள் சிதைந்து காணப்படுவதை வைத்துத் தொல்காப்பியமும் அத்தகையதே என்ற முடிவுக்கு வருகிறார். '" இதைவிட வியப்பானது என்னையெனில் தொல்காப்பிய மரபியலில் அரசர்க்கு உரியனவாகக் கூறப் பெறும் படை, கொடி (சூ.626) முதலியவற்றைக் கொண்டும், அரசரும், வணிகரும், அவர் தம் படைக்கலங்களுடன் சேர்த்துப் போற்றப் பெறுவர் என்ற மரபியல்(சூ.631) சூத்திரங் கொண்டும், அதே இயல் கூறும் 653ஆம் சூத்திரங்கொண்டும், இவை பாணர்களின் வாய்மொழிப் பாடல்கட்காக இயற்றப் பெற்ற இலக்கணம் என்று உறுதியாகக் கூறுகிறார். ' இப்புதிய கருத்தை உலவவிடும் கைலாசபதி 'இதுவரை யாரும் இதுபற்றிச் சிந்திக்கவில்லை' என்றும் கூறுவது வியப்பாக உள்ளது. தமிழ் மரபை நன்கு புரிந்து கொள்ள முயலாமல் மேனாட்டுத் திறனாய்வாளர் கூற்றுக்களைக் கற்றவுடன் அவற்றை அப்படியே எல்லாவிடங்களிலும் ஏற்றிக் காண்பது இற்றை நாளில் சில அறிஞர்கட்கு இயல்பாகிவிட்டது. இத் தவற்றை இந் நூாலசிரியனும் ஒரு காலத்துச் செய்ததுண்டு. தமிழில் எழுத்துமுறை மிகப் upత5rయిDT53మి இருந்து வந்தது இக் கருத்தின் குறைபாட்டை அறிவிக்கத்தான் முற்பகுதியில் தொல்காப்பியத்தில் கூறப் பெற்றுள்ள எழுத்ததிகாரத்தின் பகுதி களும், செய்யுளியலும் சங்கப் பாடல்கள் தோன்றுவதற்குப் பன்னூறு ஆண்டுகளின் முன்னரே தோன்றிவிட்டன என்பதும் எடுத்துக் காட்டப்பெற்றன. எழுத்துக்களின் தோற்றம், பிறக்கு மிடம், புள்ளியுடன் இருக்கும் மெய்வடிவம் முதலியவற்றைக்