பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாவது சுவை 52 I மருட்கைச் சுவை அடுத்துக் காணப்படவேண்டியது மருட்கை என்னும் சுவை யாகும். அற்புதம் என்று கூறுவதும் இதனையேயாம். புதுமை, பெருமை, சிறுமை. ஆக்கம் என்பவை காரணமாக இச் சுவை தோன்று மென்பர். வியப்பைத் தரக் கூடிய எத்துணையோ நிகழ்ச்சிகள் பெரிய புராணத்துள் இருப்பினும் பெரும்பான்மை யானவற்றை மருட்கைச் சுவையுடைனவாக ஆசிரியர் காட்ட வில்லை. எத்துணைப் புதுமை, பெருமை, ஆக்கம் உடையன வாயினும் அவை இறைவன் திருவருளால் நிகழ்வன என்று உணர்ந்தவர்கட்கு அதில் வியப்புத் தோன்றுவதில்லை. எனவே தான் பெரியபுராணப் பாத்திரங்கள் இச் சுவையைக் காட்டுவ தில்லை. சிலவிடங்களில் இவை குறிப்பாகக் காட்டப்பெறும். உதாரணத்திற்குச் சிலவற்றைக் காணலாம். திருநாவலுரர் திருமணத்தின் இடையே புகுந்து அத் திருமணத்தை நிறுத்துமாறு கூச்சலிட்ட கிழ வேதியர் தம்பாலுள்ள ஒலையின் மூலம் நாவலூரர் தமக்கு அடிமை என்பதைச் சாதிக்க முயன்றார். பிழைபடு வழக்கைக் கொணந்த அவர் திருவெண்ணெய் நல்லூரைச் சேர்ந்தவர் என்றவுடன் திருமணத்திற்கு வந்திருந்த வர்கள் 'அவ்வாறாயின் உன்னுடைய ஊருக்கே சென்று உன் வழக்கை விசாரிக்கலாம்' என்றவுடன் மணமகன் உட்பட அனைவரும் திருவெண்ணெய்நல்லூர் சேர்ந்தனர். வழக்கினை விசாரித்த மறையோர் சபையினர், ஆட்சி, ஆவணம் என்ப வற்றைக் கொண்டு கிழவேதியர் வென்றதாகத் தொவித்து விட்டனர். அடுத்து அவர்களே கிழவரைப் பார்த்து, 'அருமுனி! நீ முன்காட்டும் ஆவணம் அதனில் எங்கள் பெருமைசேர் பதியே யாகப்பேசியது. உமக்கு இவ்வூரில் வருமுறை மனையும் நீடு வாழ்க்கையும் காட்டுக' என்றார். ' அதுகேட்ட முதிய மறையவர், 'பொருவரும் வழக்கால் வென்ற புண்ணிய முனிவர் என்னை ஒருவரும் அறியீராகில் போதும் என்று உரைத்துச் சூழ்ந்த பெருமறையவர் குழாமும் நம்பியும் பின்பு செல்லத் திருவருட்டுறையே புக்கார் கண்டிலர் திகைத்து நின்றார்..." என்ற முறையில் திருவிளையாடல் செய்து காட்டியது மாபெரும் வியப்பை, மருட்கையை நம்பி உள்பட அனைவருக்கும் உண்டாக் கிற்று என்பதைச் சேக்கிழார் அழகாக விவரிக்கின்றார்.