பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 22 பெரியபுராணம்- ஓர் ஆய்வு திருநீலக்கண்டர், குங்குலியக்கலையர் வாழ்க்கையில் இச்சுவை திருநீலகண்டரும் அவர் மனைவியாரும் குளத்தில் மூழ்கும் போது வயது முதிர்ந்தவர்களாக மூழ்கினர். வெளியே எழும் பொழுது 'மேவிய முப்பு நீங்கி விருப்புறும் இளமை பெற்று தேவரும் முனிவர் தாமும் சிறப்பொடு...... ° 莹3 போற்றும் நிலையில் தோன்றினராம். இதனைக் கண்ட மக்கள், 'இந்நிலை இருந்தவண்ணம் என்? என மருண்டு நின்றார்: ' என்பார் கவிஞர். இதில் நுணுக்கம் என்னவென்றால் வியப்புச் சுவை யாருக்குத் தோன்றியதாகக் கவிஞர் பாடுகிறார் என்பதே யாகும். 'அந்நிலை அவரைக் காணும் அதிசயம் கண்டார் எல்லாம் " இந்த வியப்பில் ஆழ்ந்தார்களேயன்றி இதற்கு மூலகாரணமாக இருந்த திருநீலகண்டருக்கும் அவர் மனைவியார்க்கும் எவ்வித மருட்கையும் தோன்றியதாகக் கவிஞர் பாடவில்லை. குங்குலியக்கலையர் தம் மனைவியின் திருமாங்கலியத்தையும் விற்றுக் கோயிலில் சென்று, குங்குலியத் தூபத் தொண்டு செய்துவிட்டுப் பசி மயக்கத்தால் அங்கேயே சாய்ந்துவிட்டார். இறைவன் கனவிடைத் தோன்றி 'சாலப் பசித்தாய் உன்றன் தடநெடு மனையில் நண்ணி ”莺蛤 பாலின் இன்னடிசில் உண்டு பருவரல் ஒழிக என்று கூறினார். கலையருக்கு வீட்டில் கஞ்சிகூட இல்லை என்பது தெரியும். ஆனால், 'அலைபுனல் சென்னியார் தம் அருள்மறுத்து இருக்க அஞ்சி' வீடு சென்றார். குபேரனுடைய செல்வம் வீட்டில் கொழித்து நிற்கின்றது. எந்தவித மகுட்கையும் இல்லாமல் மனைவியைப் பார்த்து, -