பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாவது சுவை 52.3 'வில்லொத்த நுதலாய்! இந்த விளைவெலாம் என் கொல்? என்ன அல்லொத்த கண்டன் எம்மான் அருள்தர வந்தது' என்றாராம் அந்த அம்மையார்! கூழுக்கு இல்லாமல் காய்ந்த ஒருவருக்குக் குபேரனுடைய செல்வம் ஒரே இரவில் வருகிறது. குபேர செல்வத்தில் திளைத்த இளையான்குடியார்க்கு, 'தன்னை மாறி இறுக்க உள்ள கடன்கள் கொள்ளும் " அளவிற்கு வறுமை வருகிறது. இரண்டு நிலையிலும் இந்த இரண்டு தொண்டர்களும் எவ்வித வியப்பையும் அடையவில்லை என்பதை அறிதல் வேண்டும். தொண்டர்கட்குத் தலையாய இலக்கணம் சமதிருஷ்டி என்பதேயாகும். இந்தச் சமநோக்கு வந்துவிட்டவர்கள் எதைக் கண்டும் வியப்படைவதில்லை. அதனால்தான் அடியார்கள் வரலாற்றில் எத்தகைய நிகழ்ச்சி யையும் கண்டு இவர்கள் வியந்தார்கள் என்று கவிஞர் பாடுவதில்லை. இயற்கையின் இறந்த நிகழ்ச்சி (miracles) எத்தனை நடந்தாலுங்கூட இவர்கள் அதுபற்றியும் பெரிது படுத்துவதில்லை. - இயற்கையின் இறந்த செயல்கள் விளக்கம் சேரமான் பெருமாள் நாயனார் சேரர் குடியில் பிறந்தாலும் அரசாளும் உரிமை பெற்ற நேரடிக் குடிவழியில் வந்தவரல்லர். ஆட்சி செய்துவந்த மன்னன் துறவு மேற்கொண்டு சென்று விட்டான். அம்மரபில் உதித்தவர் என்ற காரணத்தால் பெருமாக்கோதையார் என்ற பெயருடன் திருக்கோயிலில் தொண்டு புரிந்து வாழும் இவரை அமைச்சர்கள் வந்துவேண்டி அரசுப் பொறுப்பு ஏற்கச் சொன்னார்கள். திருத்தொண்டுக்கு இடையூறாகும் ஆட்சிப் பொறுப்பு எனக் கலங்கிய பெருமாக் கோதையார் இறைவன் திருவுளக் குறிப்பை அறிந்து அதன்வழிச் செல்வேன் என்று முடிவு செய்து கொண்டு இறைவனைத் தொழுது நின்றார். அந்நிலையில் நிகழ்ந்தவற்றைச் சேக்கிழார் படம்பிடித்துக் காட்டுகிறார். திருத்தொண்டுக்கு முட்டில்லாமல் ஆட்சி பீடம் ஏறலாமா, வேண்டாமா? என்பதை அறிவதற்குத் தானே இறைவனது திருவருட் குறிப்பை நாடினார்? ஆனால் விளைந்தது என்ன? 'மேவும் உரிமை அரசளித்தே விரும்பு காதல் வழிபாடும் யாவும் யாரும் கழறினவும் அறியும் உயர்வும் ஈறில்லாத்