பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 24 பெரியபுராணம்- ஓர் ஆய்வு தாவில் விறலும் தண்டாத கொடையும் படைவாகன முதலாம் காவல் மன்னர்க் குரியனவும் எல்லாம் கைவந்து உறப் பெற்றார் ... ' இவை இத்தனையும் இறைவன் அவருக்கு உடனே அருளி விட்டான். இந்த உலகில் வேறு யாருக்கும் கிடைக்காத ஒரு சிறப்பு இவருக்குக் கிடைத்தது. அஃறிணை, உயர்திணை உயிர்கள் அனைத்தும் தம்முள் செய்துகொள்கின்ற உரையாடலை உடனே உணர்நது கொள்ளும் சக்தியையும் பெருமாக்கோதையார் பெற்றுவிட்டார். உலக வரலாற்றில் சாலமன் என்ற மன்ன னுக்கு மட்டுமே இத்தகைய ஆற்றல் இருந்தது என விவிலியத்தின் பழைய ஏற்பாடு (Old Testament) பேசுகிறது. இந்த ஆற்றலைப் பெற்றிருந்த சாலமன் அரசர் அதனை எவ்வாறெல்லாம் பயன்படுத்தினார் என்றும் விவிலியம் கூறுகிறது. ஆனால் வியப் பினும் வியப்பைத் தரும் இந்த ஆற்றலைப் பெற்றிருந்த பெருமாக்கோதையார் இதுபற்றி வியப்போ மருட்கையோ அடைந்ததாகவோ, இந்த ஆற்றலை ஒரு வினாடி பயன்படுத்திய தாகவோ பெரியபுராணங் கூறவில்லை. இந்நாட்டுப் பக்தர்கள், தெ ண் கள் என்பவர் கட் கு ம. ருட்கை அல்லது அற்புதம் என்பது எதுவுமே இல்லை. இவ்வாறு அவர்கள் நினைக்கக் காரணம் யாதாக இருக்கும் என்று சிந்தித்துப் பார்ப்பதில் தவறு ஒன்றும் இல்லை. மனித னிடம் இருக்கும் ஆற்றலை இன்றைய விஞ்ஞானிகள் கண்டு வியப்பெய்துகின்றனர். உலகின் விஞ்ஞானிகள் அனைவரும் அதிர்ச்சி அடையுமாறு 'ரிலட்டிவிட்டிப் பொதுக் கொள்கையை வெளியிட்ட இந்த நூற்றாண்டின் தன்னிகரற்ற விஞ்ஞானி யாகிய ஐன்ஸ்டின்கூடத் தம் மூளையின் திறனில் 15 சதவிகிதத் துக்குமேல் பயன்படுத்தவில்லை என்று கூறுகின்றார். ஐன்ஸ்டினே தம் ஆற்றலில் 15 சதவிகிதத்தைப் பயன்படுத்தினார் என்றால் சாதாரண மக்கள் தம் ஆற்றலில் ஆயிரத்தில் ஒரு பங்கைக்கூடப் பயன்படுத்துவதில்லை என்பதை அறியமுடிகிறது. எனவே மனிதனிடம் மறைந்து கிடக்கும் ஆற்றலுக்கு எல்லையே இல்லை. இந்த ஆற்றலைப் பயன்படுத்தி ஒரு சிலர் நாம் செய்யமுடியாத செயல்களைச் செய்யும்பொழுது நாம், நம் அறிவுக் குறை காரணமாக அவற்றை இயற்கையின் இறந்த செயல்கள் (Miracles) என்று கூறிவிடுகிறோம். ஆனால் மனிதனிடம் மறைந் துள்ள ஆற்றலின் அளவையும், அதனைப் பயன்படுத்திச் செயல் புரியும் வழி துறைகளையும் அறிந்திருந்த நம் முன்னோர் இவற்றை இயற்கையின் இறந்த நிகழ்ச்சிகள் என்று கூற மறுத்து