பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாவது ᏜᎦö©lᏗ - 52.5 விட்டனர். இயற்கையின் ஆற்றல் என்ன என்பதையே அறியாத ஒருவன் இயற்கையின் இறந்த நிகழ்ச்சி என்று எதனைக் கூறமுடியும்? கண்ணகி 'மதுரையை எரிப்பேன்’ என்று வஞ்சினங் கூறும் பொழுது அது இயற்கையின் இறந்த செயல் என்று அவள் கருத வில்லை. எனவே அது தன்னால் முடியுமா? என்ற வினாவை எழுப்பி விடைகாண முற்படவில்லை. தன்னுடைய ஆற்றலை அறிந்திருந்தாள் ஆகலின் இது தன்னால் முடியும் என்றே அவள் நம்பினாள்; அந்த நம்பிக்கையில் பிறந்ததுதான் அவள் பேச்சும். அதனால்தான் காப்பியம் இயற்றும் எந்தக் கவிஞனும் எதனை யும் இயற்கையின் இறந்த நிகழ்ச்சியாகக் கூறுவதில்லை. இயற்கையின் இறந்த செயல்களை இயற்றுபவர்கட்கு அது தம் ஆற்றலின் அளவிற்பட்ட ஒன்றேயாகும். அல்லாதார்க்கு அதாவது மானுட ஆற்றலை அறியாதவர்கட்கு அதே செயல் இயற்கையின் இறந்தாகவும் மருட்கையைத் தருவதாகவும் காணப்படும். இந்தத் தொண்டர்களும் பக்தர்களும் இத்தகைய செயல் களை நிகழ்த்தும்பொழுது தம் ஆற்றல் காரணமாக இதனைச் செய்தாகக் கூறுவதில்லை. அதற்குப் பதிலாக எந்தச் சக்தியி னிடத்து அல்லது பரம் பொருளிடத்துத் தாங்கள் சரணம் அடைந்துள்ளார்களோ, அந்தப் பொருளே இதனைச் செய்வ தாகக் கூறினர். பூசலார் நாயனார் காலத்து வாழ்ந்து காஞ்சி யில் உலகம் கண்டு வியக்கும் கயிலாய நாதர் கோயிலைக் கட்டிய இராசசிம்மப் பல்லவ மன்னன் அந்தக் கோயில் கல்வெட்டிலேயே இந்தக் கலிகாலத்திலும் அசரீரி கேட்டவன் என்று தன் பெருமையைத் தானே பறைசாற்றிக் கொள்கிறான். ஆனால் . இங்குச் சுந்தரமூர்த்திகளிலிருந்து சேக்கிழார் வரை நூற்றுக் கணக்கானவர் அசரீரி கேட்டவர்களாவார்கள். என்றாலும் யாரும் இதுபற்றிப் பெருமையாகக் கூறிக் கொள்ளவில்லை. பெரியபுராணம் பாடத் தமக்குள்ள உரிமை பற்றிக் கூறவந்த சேக்கிழார், 'அருளின் நீர்மைத் திருத்தொண்டு அறிவரும் தெருளில் நீர் இது செப்புதற்கு ஆம் எனில் வெருளில் மெய்ம்மொழி வான்நிழல் கூறிய பொருளின் ஆகும் எனப்புகல் வாம் அன்றே 5 1 என்று கூறும் பொழுது தம்மை அசரீரி இது பாடுமாறு ஆணை யிட்டது எனக் கூறி அமைகின்றார். எனவே இத்தொண்டர்கள்