பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

526 பெரியபுராணம்- ஓர் ஆய்வு எதனையும் வியப்புடையதுஎனக் கருதுவது இல்லையாகலின் மருட்கைச் சுவை இங்கு விளக்கமாகப் பேசப் பெறுவதில்லை. மயிலையில் சிவநேசச் செட்டியார் தம் மகள் பூம்பாவை பாம்பு தீண்டி, இறந்துவிட, அவளுக்கு எரியூட்டிச் சாம்பலையும் எலும்பு களையும் குடத்துள் வைத்திருந்து திருஞானசம்பந்தர் வருகையில் அவர்முன் வைத்தார். இறைவன் திருவுளக் குறிப்பினை அறிந்த பிள்ளையார் ஒரு பதிகம் பாடி எலும்பைப் பெண்ணுருப் பெறச் செய்தார். அற்புதம், அதிசயம் என்ற ஒன்றிருக்குமாயின் இதனை விட வேறு இருக்க முடியாது, இந்த நிகழ்ச்சியைக் கண்டவர்கள் என்ன கூறினார்கள் என்று கூறுவந்த கவிஞர் அம்மக்களுள்ளும் பலவகையினர் இருந்தனர் என்பதை அவர்கள் பேசியவற்றைக் கூறுமுறையில் பெற வைக்கின்றார். "ஆங்கனம் எழுந்து நின்ற அணங்கினை நோக்குவார்கள் ஈங்கிது காணிர்' என்னா அற்புதம் எய்தும் வேலை பாங்கு சூழ் தொண்டரானோர் 'அரகர' என்னப் பார்மேல் ஓங்கிய ஓசை உம்பர் நாட்டினை உற்றதன்றே' ‘தேவரும் முனிவர்தாமும் திருவருட் சிறப்பு நோக்கிப் பூவரு விரைகொள்மாரி பொழிந்தனர்; ஒழிந்த மண்ணோர் யாவரும் இருந்தவண்ணம் எம்பிரான் கருணை என்றே மேவிய கைகள் உச்சி மேற்குவித்து இறைஞ்சி வீழ்ந்தார்’ ’’ என்ற இந்த இருபாடல்களிலும் இந்த அற்புத்தை நிகழ்த்திய பிள்ளையார்பற்றி யாரும் எதுவும் கூறினதாக ஒன்றும் இல்லை. எழுந்த பெண்ணைக் கூர்ந்து கவனித்தவர்கள் (நோக்குவார்கள்) இது என்ன அற்புதம் பாருங்கள் என்று கூறினர். இந்த மக்கள் கூட்டத்தில் தொண்டர்கள் பலரும் இருந்தனர். அவர்கள் இது அதிசயம் என்று கூறவில்லை. அதற்குப் பதிலாக 'அரகர' என இறைவனைத் துதித்தனர். தேவர்கள் முனிவர்கள் என்பவர்கள் திருவருளின் சிறப்பு எனக் கூறினர். இந்த மூன்று வகையினரையுந் தவிர ஏனைய மண்ணோர்கள் இறைவன் கருணை இருந்த வண்ணம் இது என்று கைகளை உச்சிமேற்குவித்து மண்ணில் வீழ்ந்து வணங்கினார்கள். - - எனவே நான்கு வகையாக இதனை அறிந்தவர்களைக் கவிஞர் கூறுபடுத்துகிறார். . (1) அணங்கினை நோக்கினவர்கள்- 'அற்புதம் என்றார். (2) பாங்கு சூழ்தொண்டர்- 'அரகர என்றனர்.