பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாவது சுவை • 527 (3) தேவர், முனிவர்-'திருவருட்சிறப்பு' என்றனர். (4) ஒழிந்த மண்ணோர் - 'எம்பிரான் கருணை என்றனர் இதனை வகைப்படுத்திக் கூறும் முறையிலேயே முதல் கூட்டத் தார் பிள்ளையாரின் அருகே நின்று இந்நிழ்ச்சியைக் கண்ணாற் கண்டவர்கள் என்பதையும் இரண்டாவது கூட்டம் இது போன்ற வற்றை முண்டியடித்துக்கொண்டு சென்று பார்க்காத, ஆனால் என்ன நடக்கும் என்பதை நன்கறிந்த தொண்டர் கூட்டம் கூட முன்னே சென்று தம் கண்களாற் காணவேண்டும் என்ற அறியார்வம் (Curiosity) இல்லாதவர்கள் இத்தொண்டர்கள். பிள்ளையாரை நன்கறிந்த இவர்கள் அவர் முத்தொழிலும் வல்லவர் என்பதை நன்கறிந்தவர்களாதலின் பக்கங்களில் சூழ்ந்து நின்றனரே தவிர இந் நிகழ்ச்சியைக் காணும் அறி ஆர்வம் இல்லாதவர்கள். அவர்கள் 'அரகர' என இறைவன் புகழ்பாடி வாழ்த்தினர். மூன்றாவது தேவர் முனிவர் கூட்டம். இவர்களும் இது திருவருளின் சிறப்பு என்றனர். நான்காவதாக உள்ள கூட்டம் மயிலையில் இல்லாமல் பல்வேறு இடங்களிலிருந்து இச் செய்தியைக் காதால் கேட்டவர்கள். அவர்களும் 'எம்பிரான் கருணை' என்று மட்டுமே கூறி அமைந்தனர். பிற காப்பியங்களில் இத்தகைய நிகழ்ச்சி பற்றிக் கூற வேண்டி இருந்திருப்பின் இவர்கள் அனைவரும் பிள்ளையாரைப் புகழ்ந்ததாகவே பாடல்கள் அமைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு கூறுவதால் பிள்ளையாருடைய மதிப்பைக் குறைத்துவிட்டதாக யாரும் நினைய வேண்டியதில்லை. சேக்கிழாரின் தனிச்சிறப்பு இதுவேயாகும் என்பதை வலியுறுத்தவே இது கூறப் பெறுகிறது. தொண்டர்கள் வாழ்க்கைபற்றிக் கூறும் போது இவர்களுடைய கருவிகரணங்கள் பசுகரணங்கள் என்ற நிலைமாறிப் பதிகரணங்களாகவே ஆகிவிட்டன என இந் நாட்டார் கூறும் கருத்து முன்னரே குறிக்கப் பெற்றது. எனவே இவர்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் இறைவன் செயல் களாகவே கருதப் பெற்றன. இறைவன் இவர்கள் மூலமாகவே இவற்றைச் செய்கிறான் என்பதை ஏற்றுக் கொண்டால் பின்னர் இச்செயல்களைச் செயற்கருஞ் செயல்கள் என்று கூறுவது சரியன்று. முத்தொழிலையும் செய்யும் பரம்பொருள் எலும்பைப் பெண்ணாக் கியது புதுமை என்று யாரேனும் கூறினால் அது பைத்தியக்காரத் தனமாகும். இச்சா மாத்திரத்தில் அனைத்தையும் ஆக்கும் பரம்பொருள் இதனைச் செய்வதில் வியப்பு ஒன்றுமில்லை. இத் தொண்டர்கள் செய்கின்ற செயல்கள் அனைத்தும் இறைவன்