பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

528 பெரியபுராணம் - ஒர் ஆய்வு செயல் என்று கூறிவிட்டபிறகு எதையும் செயற்கருஞ் செயல் என்று சேக்கிழார் கூறாததன் நுணுக்கத்தை அறியலாம். உலக மொழிகளில் எந்த மொழியில் தோன்றின காப்பியமாயினும் அதன் பல்வேறு உறுப்புக்களுள் இயற்கையின் இறந்த நிகழ்ச்சி களைக் கூறுவதும் ஒரு பகுதியாகவே அமைந்திருக்கும். இதில் நம்பக் கூடியது, முடியாதது என்ற பைத்தியக்காரத்தனமான வினாவிற்கு இடமே இல்லை. மனித முயற்சிக்கு, அறிவிற்கு அப்பாற்பட்டதாய் எது நிகழ்ந்தாலும் அது இயற்கையின் இறந்தது என்று கூறப் பெற்றது. எனவே அது இல்லாத காப்பியத்தைக் காணவியலாது. ஆனால் பெரியபுராணத்தின் சிறப்பு யாதெனில் எந்தப் பெரிய அற்புதத்தையும் அன்றாட நடைமுறையில் நடப்பதுபோலக் காட்டிய சிற்பேயாகும். இத் தொண்டர்களின் உண்மையான வடிவைச் சேக்கிழாரே கண்ணப்பர் புராணத்தில், 'தன்பரிசும் வினை இரண்டும் சாரும் மலம்மூன்றும் அற அன்பு பிழம்பாய்த் திரிவார்....... * 53 - என்று ஈரடிகளில் சொல்லிவிடுகிறார். மேலும் 'அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல் அன்பென்றும் அவனுடைய அறிவெல்லாம் நமையறியும் அறிவென்றும் அவனுடைய செயலெல்லாம் நமக்கினியவாம். ' என்றும் இறைவனே கூறுவதாகக் கூறுகிறார். தொண்டர்கள் நிலை இதுவென்றால், அவர்கள் செயல் எல்லாம் அவன் செயல் என்றால், அதில் செயற்கருஞ் செயல் என்றும், சாதாரணச் செயல் என்றும் தரம் பிரிக்க ஒன்றும் இல்லை. எனவேதான் எந்த நிகழ்ச்சியையும் சேக்கிழார் செயற் கருஞ் செயல் என்றோ, இயற்கையின் இறந்த செயல் என்றோ பாராட்டுவதில்லை. இந்தப் பொது விதியைச் சேக்கிழாரே இரண்டொரு இடங்களில் மாற்றுகிறார். அந்தப் புறநடை இந்தச் சட்டத்தை மேலும் வலுப்படுத்துகிறதே தவிர வலு விழக்கச் செய்யவில்லை. தொண்டர்கள் செய்த அற்புதச் செயல்கள்போக அவர்கள் அன்றாட வாழ்க்கையில் செய்துவந்த செயல்களே அவர்களைத் தொண்டர்களாக ஆக்குவதற்கு உதவின. வேளாளராகிய இளையான்குடிமாறர் வருகிறவர் அனைவருக்கும் சோறு போடு தலும், திருநீலகண்டர் சட்டி செய்து தருதலும், அமர்நீதி கோவணம் நெய்து தருதலும், திருக்குறிப்புத் தொண்டர் துணி வெளுத்துத் தருதலும், குங்குலியக் கலையர் திருக்கோவிலில்