பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாவது சுவை 529 குங் குலியம் இடுதலும் அவரவர்களுடைய வாழ்வில் மேற் கொண்ட தொழில்களாகும். இத்தொழில்களே அவர்கள் வீடு பேறடைய உதவின. ஆனால் இத்தகைய அன்றாடத் தொழிலாகவும் இல்லாமல் செயற்கருஞ் செயல் என்று உலகத்தார் கூறும் இயற்கையின் இறந்த செயலாகவும் இல்லாமல் உள்ள ஒன்றை ஒருவர் செய் கிறார். இத்தகைய செயலை இவருக்கு முன்னும் யாரும் செய்த தில்லை; தம்மை மறந்த நிலையிலும் இவர் இதனைச் செய்து விடவில்லை. நல்ல நினைவோடிருக்கும் போதேகூடத் தம் கொள்கையின்படி நடக்கவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ஒருவர் இதுவரை யாரும் கனவிலும் நினையாத செயல் ஒன்றைச் செய்கிறார். சேக்கிழாரும், ஏன்? இறைவனுங்கூட அச்செயலைப் பாராட்டி இது செயற்கருஞ் செயல் எனக் கூறுகின்றனர். இயற்பகையார் வரலாற்றில் இச்சுவை முற்றத் துறந்த பட்டினத்துப் பிள்ளையும் இந்த அறுபத்து மூவரில் மூன்று பேரை எடுத்துத் தனியே பாராட்டுகிறார். வாளால் மகனை அரிந்து ஊட்டிய சிறுத் தொண்டர், மாது சொன்ன சூளால் இளமை துறந்த திருநீலகண்டர், நாள் ஆறில் கண் இடந்து அப்பிய கண்ணப்பர் என்ற மூவரைப் பாராட்டும் பட்டினத்தாருங்கூட இவருடைய செயலை, நினைக்கவும் முடியாதது என விட்டு விட்டார்போலும்! அத்தகைய செயல், செய்த காலத்திலும், சேக்கிழார். பாடிய காலத்திலும், ஏன்? இன்றுங்கூட ஆராய்ச்சிக்கும், சர்ச்சைக்கும் கருத்து வேற்றுமைக் கும் இடந்தரும் செயலாகும். அதனைச் செய்தவர் இந்த உலகியல் சட்ட திட்டங்கட்குப் புறம்பானவர் என்ற கருத்தில் (உலக) இயற்பகையார் எனக் காரணப் பெயரும் பெற்றுவிட்டார். புகார் நகரில் வாழ்ந்த வணிகர்; அடியார்கள் யாராக இருந் தாலும் அவர்கள் வேண்டும் யாவையும் இல்லை என்னாமல் கொடுக்கும் இயல்பினைக் கொள்கையாக, குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தவர். இந்நிலையில் துர்த்த வேடங் கொண்டு வந்த அந்தணர், - *. 'மன்னு காதல் உன் மனைவியை வேண்டி வந்ததிங்கென அந்தணர் எதிரே சொன்ன போதிலும் முன்னையின் மகிழ்ந்து.... ' 'இது எனக்கு முன்பு உள்ளதேயாகும். என்னிடம் இல்லாததைக் கேட்டு அதனைத் தர இயலவில்லையே என்று வருந்துவதைவிட