பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 0 பெரியபுராணம் - ஓர் ஆய்வு இருக்கும் ஒன்றனைக் கேட்டாரே என்று மகிழ்ந்தார். 'கற்பின் மேம்படு க்ாதலியாரைப் பார்த்து, 'விதி மணக்குல மடந்தை! இன்று உனை இம் மெய்த்தவர்க்கு நான் கொடுத்தனன்' என்ற வுடன் அவ்வம்மையார் முதலிற் கலங்கினார்; பின்னர் மனந் தெளிந்தார். 'நீர் உரைத்த ஒன்றை நான் செய்யும் அத்தனை அலால் உரிமை வேறுளதோ எனக்கு?’ என்று கூறிப் புறப்படத் தயாரானார். வெளியே வந்த தொண்டரைப் பார்த்து, 'இவரை நான் அழைத்துக் கொண்டு போகையில் அதனை எதிர்த்துவரும் உன் சுற்றத்தாரிடமிருந்து என்னைக் காக்க வேண்டும் என்று அந்த வேதியர் கேட்டுக் கொண்டார். போர் புரிய ஆயத்தமாக இயற்பகை வருகின்றார். அவருடைய சுற்றம், அம்மையாருடைய சுற்றம் என்ற இரண்டு பக்கத்தாரும் கூடி வளைத்துக் கொண்ட னர். அந்தச் சுற்றத்தார் பேசும் பேச்சுக்கள் கூர்ந்து கவனிக்கத் தக்கனவாகும். 'இணையதொன்று யாரே செய்தார்? இயற்பகை பித்தனானால், புனையிழை தன்னைக் கொண்டு போவதாம் ஒருவன்? என்று துனைபெரும் பழியை மீட்பான் தொடர்வதற்கு எழுந்து சூழ்வார் என்றும், 'அழிதகன் போகேல்; ஈண்டு.அவ் அருங்குலக் கொடியைவிட்டுப் பழிவிட நீபோ என்று பகர்ந்து எதிர் நிரந்துவந்தார். 57 என்றும் சேக்கிழார் பாடுகிறார். சுற்றத்தார்கள், இயற்பகையின் மனைவியை அழைத்துக் கொண்டு செல்லும் வேதியனை நோக்கிக் கூறியவை இவை. அடுத்து இயற்பகையைப்பார்த்து அவர்கள், 'ஏட! நீ என் செய்தாயால்: இத்திறம் இயம்புகின்றாய்; நாடுறு பழியும் ஒன்னார் நகையையும் நாணாய்; இன்று பா.வ. ரைப்பது உன்றன் மனைவியைப் பனவற்கு ஈந்தோ? கூடவே மடிவதன்றிக் கொடுக்கயாம் ஒட்டோம் ‘’ - என்று சூளுரைக்கின்றார்கள். இதனிடையே அந்த அம்மையாரின் நிலையையும், சேக்கிழார் படம் பிடித்துக் காட்டுகிறார். சுற்றத்