பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36.2 பெரியபுராணம்- ஓர் ஆய்வு கூறும் இலக்கணம் தோன்றிப் பன்னூறு ஆண்டுகளின் பின்னர்த் தோன்றிய இலக்கியங்களை வாய் மொழி இலக்கியம் என்று கூறுவது எவ்வாறு பொருந்தும்? ஒலையில் எழுதும் பழக்கம் வரு முன்னர் தமிழர் வேறு எழுது கருவிகளைக் கொண்டிருந்தனர் இறையனார் களவியல் உரைத் தொடக்கத்தில், இவ் உரையை இவர் இவருக்குரைத்தார் என்று எட்டுத் தலை முறைப் பெயர்கள் கூறப் பெற்றுள்ளதை எடுத்துக் காட்டி வாய்மொழியாகவே இலக்கியம் வளர்ந்தது எனக் கூற முன்வரும் ஆசிரியர் கைலாசபதி, அதே உரையின் முற்பகுதியில் இறையனார் களவியல் நூல் தோன்றிய வரலாற்றைக் கூறுகையில் 'ஆலவாயின் அவிர் சடைக் கடவுள் அறுபது சூத்திரம் செய்து அதனை மூன்று செப்பேட்டில் வரைந்து தன் பீடத்தின் கீழ் இட்டான் (பக்.8) என்று வரும் பகுதியை ஏனோ கவனிக்கவில்லை? உரை தோன்று முன்னரே செப்பேட்டில் எழுதும் பழக்கம் உண்டு என்றல்லவா கூறப்பெறுகிறது. கிரேக்க மொழியில் பாணர் பாடும் பழக்கத்தைப்பற்றிய ஆய்வுரைகளைத் தமிழகப் பாணர் வாழ்க்கையுடன் ஒப்பிடுதல் பொருத்தமாகப் படவில்லை. 'ஹோமரின் பிள்ளைகள்' எனப்படும் அந்தப் பாணர்கள் அரசவையில் பாடியவை பழங் கதைகள். பழங்கால வீரர் வரலாற்றைப் பாடுகையில் வாய்மொழி இலக்கிய முறை பொருந்தலாம். ஆனால் புறநானூற்றில் வரும் பாடல்களைப் பாடியவர்கள் தனிப்பட்ட புலவர்கள். தம்மைப் பாணனாக உருவகித்துக் கொண்டு, சுற்றத் துடன் அரசனைக் காணவந்ததாகப் பாடப் பெற்றுள்ள பாடல் களை, உண்மையான பாணர்கள் வாய் மொழிப் பாடலாகப் பாடியதாகக் கொள்வதில் பல இடையூறுகள் தோன்றும். இங்குள்ள பாடல்கள் பாடப்பட்ட மன்னனின் எதிரேயே அவனுடைய வெற்றி, கொடை வள்ளன்மை முதலியபற்றிப் பாடப்பட்டவை. என்றோ, எங்கோ, யாரோ நடத்திய வீரச் செயல்கள் பற்றிப் பாடிய வீரப் பாடல்கள் அல்ல புறப்பாடல்கள். எனவே, முன்னரே பல பாடல்களுக்கும் பயன்படுத்திய அடை மொழிகளைக்கொண்டு ஒரு சில புதிய சொற்களைமட்டும் சேர்த்துப்பாடும் வாய்மொழி இலக்கியமல்ல இப்பாடல்கள். போரில் தோற்றுப்போனவன் பற்றியும் பாடல்கள் உள்ளன. சிற்றரசர், ஊர் நாட்டாண்மைக்காரன், அனைவருக்கும் சோறிட்ட மன்னன்வரைப் பலரும் இதில் இடம் பெறுகின்றனர்.