பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாவது சுவை 53 I தார் எதிர்ப்பைக் கண்டு அஞ்சினவன் போல் நடிக்கும் வேதி யனைப் பார்த்து, அந்த அம்மையார், 'இறைவனே! அஞ்சவேண்டாம் இயற்பகை வெல்லும் " என்று தைரியம் ஊட்டுகிறார். 'சமுதாயத்தில் வாழும் தனிப்பட்ட மனிதன் ஒருவன் தனக்குச் சரி என்றுபட்டதைச் செய்ய உரிமை உண்டா? என்ற வினாவிற்கு விடைதருவது கடினம். அந்தத் தனிப்பட்டவன், தான் வாழும் சமுதாயத்தின் சட்ட திட்டங்கட்கு உட்பட்டே அவன் வாழ வேண்டியுள்ளது. எத்துணையோ சமுதாயங்களில் வந்த விருந்தினனுக்குத் தன் மனைவியை அந்த ஒரு நாளைக்குத் தருவது உபசரிப்பு முறை என்ற மரபு இன்றளவும் உள்ளது. பல கணவரை ஏற்கும் (Polyandry) மரபும் பல சமுதாயங்களில் உள்ளது. விவாகரத்து என்ற பெயரில் ஒரு வினாடியில் மனைவியை உதறிவிடும் சமுதாய மரபுகள் இன்று உண்டு. எனவே இயற்பகை வரலாற்றை நோக்குகையில் இந்தத் தமிழ்ச் சமுதாய அடிப்படை மரபுகளை வைத்துத்தான் காண்டல் வேண்டும். இயற்பகை மனைவியை விதி மணக்குல மடந்தை' என்று விளிப்பதால் இந்தச் சமுதாய மரபும் அறிவிக்கப்படுகிறது. அப்படியானால் தனி மனிதனுக்கு என்றேனும் சமுதாய மரபி லிருந்து மீறி வாழ, தன் விருப்பம்போல் செயல்களைச் செய்ய உரிமை உண்டா? என்பதுதான் வாதம். சாதாரண மனிதர் களைப் பொறுத்தமட்டில் உரிமை இல்லை என்பதே விடை. என்றாலும் இந்தப் பொது நியதியை மீறி ஒருவர்.புறநடையாக வாழத் தொடங்கினால் இதன் முடிவுஎன்ன? அந்த தனிமனிதன் மரபை மீறிச் செய்யும் செயல்களால் நேரிடையாகப் பாதிக்கப்படுபவர் யாரோ அவருடைய மனக் கருத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். இயற் பகையின் இந்தச் செயலால் நேரிடையாகப் பாதிக்கப்படுபவர் அவர் மனைவியார் ஒருவரேயாம். ஆனால் அவர் அதை ஏற்றுக் கொண்டார். எந்த வினாடி, கண்வன் 'தந்தேன்' என்று கூறினாரோ, அந்த வினாடியே தம் கணவனை வேற்றாளாகக் கருதிவிட்டார் என்பதைச் சேக்கிழார் நுண்மையாகவும் குறிப்பா கவும் வைத்துக் காட்டுகிறார். அஞ்சுவதுபோல் நடித்தவருக்கு ஆறுதல் சொல்லும் முறை யில் இறைவனே! அஞ்சவேண்டா என்று மட்டுங் கூறாமல் 'இயற்பகை வெல்லும்' என்று கூறியதையும் கவனிக்கவேண்டும்.