பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.3 2 பெரியபுராணம்- ஒர் ஆய்வு இந்நாட்டு மரபுப்படிக் கணவன் பெயரை எந்த மனைவியுங் கூறமாட்டாள். அப்படி இருந்தும் இந்த அம்மையார் ’இயற்பகை வெல்லும் என்று கூறுவது இயற்பகையாரை மூன்றாம் மனித ராகவே மதிக்கத் தொடங்கிவிட்டார் என்பதை அறிவிக்கும். சமுதாயமும் சுற்றமும் இந்தச் செயலால் நேரிடையாகப் பாதிக்கப்படாவிடினும் 'நாடுறு பழிக்கும், ஒன்னார் நகைப்புக் கும் மட்டுமே அஞ்சுகின்றனர். இவை இரண்டு பற்றியும் கவலைப்படாமையால்தான் இயற்பகையார் என்ற பெயர் அவருக்கு வந்தது. எனவே இந்த நிலையில் இத்தொண்டர் விருப்பத்துடன், முழு அறிவுடன் (Full Sense) இதனைச் செய்தாரா? இன்றேல் தம் குறிக்கோளுக்கு இழுக்கு வந்துவிடும் என்று செய்தாரா? என்ற வினாவை எழுப்பினால் இங்குக் குறிக்கோள் பிரச்சனை இல்லை. விரும்பி, முழு அறிவுடன்தான் இதனைச் செய்தார் என்பதைச் சேக்கிழார், 'விதி மணக்குல மடந்தை! இன்றுனை இம் மெய்த்தவர்க்கு நான் கொடுத்தனன்' " என்ற அடியில் பயன்படுத்தும் நான் என்ற சொல்லினால் குறிப் பிடுகிறார். தன் செயலின் விளைவை அறிந்தே இதனைச் செய்தமையால்தான், 'செயற்கரும் செய்கை செய்த தீரனே! ஒலம் "' என்று இறைவனே இவர் செயலை வருணிக்கிறார் அற்புதம் அல்லது மருட்கை என்னும் சுவையை இந்த ஒரு புராணத்தில் தான் சேக்கிழார் மனம்விட்டுக் காட்டுகிறார். அச்சம் என்னும் சுவை அடுத்துள்ளது அச்சம் என்னும் சுவையாகும். அடியார்கள் வாழ்வில் முதலாவது களையப்பட வேண்டியது அச்சம் என்ப தாகும். ஒரு மாபெரும் மன்னன் தண்டனை அளிக்க அழைக் ன்றான் என்று வந்தவர் கூறியதைக் கேட்ட நாவரசர், நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம். என்று பாடுவதாகக் கூறிய சேக்கிழார், வந்தவர்கட்கு அரச தண்டனை வந்துவிடக் கூடாதே என்னும் இரக்க உணர்வால் அவர்கள் உடன் செல்கின்றார். அப்படியானால் எந்தத் தொண்டரும் எதைக் கண்டும் அஞ்சும் இயல்பு இல்லையாதலின்