பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாவது சுவை 5 33 காப்பியப் புலவருக்கு ஒரு இக்கட்டான நிலை தோன்றிவிடு கிறது. காப்பியப் பாத்திரங்கள் எதுவும் இச்சுவையை ஏற்க வில்லை என்றமையின் துணைப் பாத்திரங்களின் மேல் ஒரளவு இச்சுவையை ஏற்றிப் பாடுகின்றார். காரைக்கால் அம்மையின் கணவனின் அச்சம் காரைக்காலம்மையின் கணவன் சாதாரண உலகியல் நிறைந்த வணிகன். எனவே அவனைப் பொறுத்தமட்டில் வாணிபம், இலாபம் என்ற முறையில் சிந்தனை சென்றதே தவிர, மென்மையான மனித உணர்வுகள் அவனிடம் வேலை செய்ய வில்லை. இவனைப்பற்றிக் கூறவந்த சேக்கிழார் மயில் போன்றவ ராகிய அம்மையாரைக் காளை போன்றவனாய இவனுக்கு மணம் முடித்தார்கள் என்று கூறுவதுடன் அன்றாடம், 'உற்ற பெரும் பகலின் கண் ஓங்கியபேர் இல் எய்தி பொற்புற முன் நீராடிப் புகுந்தடிசில் புரிந்து அயில'" தொடங்கினான் என்று கூறுகிறார். அதாவது அன்றாடம் மதியத்தில் கடையைவிட்டு வந்துதான் குளிப்பான் என்கிறார். மதியத்தில் குளித்தல் தமிழ் நாட்டில் புதுமையானது. ஒரு நாள் இரண்டு மாம்பழங்களை வீட்டிற்கனுப்பிய அவன் உண்ணும் பொழுது, அக் கனிகளுள் ஒன்று, 'தனை நுகர்ந்த இனிய சுவை ஆராமைத் தார்வணிகன் இனையதொரு பழம் இன்னும் உளததனை இடுக § 3 எனக் கேட்கிறான். இரண்டு சுவை உடைய பழங்கள் வந்தது நற்காலம்; மனைவியும் ஒன்றை உண்ணட்டும் என்று நினையா மல் 'அதனையும் இடுக எனக் கேட்கின்ற இந்தக் கணவன் சாதாரண மனிதரினும் ஒருபடி தாழ்ந்து போகிறான். இறைவ னருளால் பழம் பெற்று அதனை மனைவியார் தருகிறார். ஏனைய உணர்வுகளுள் குறையுடையவனாயினும் சுவையுணர்வில் விஞ்சியவன் என்பதை அவன் வெளிப்படுத்துகிறான். 'முன்தருமாங் கனியன்று மூவுலகில் பெறற்கு அரிதால் பெற்றது வேறு எங்கு என்று பெய்வளையார்தமைக் கேட்டான். இறைவன் திருவருளை வெளியிற் கூறக்கூடாது என்றமையின் நடந்ததைக் கூறலாமா வேண்டாமா என்ற மனப் போராட்டத்துக்கு ஒரு முடிவு செய்வதற்குள் அக்கணவன்,