பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

534 பெரியபுராணம்- ஓர் ஆய்வு 'எய்தவருங் கனியளித்தார் யார்?' 65 என்ற இக்கட்டான வினாவை எழுப்பி விட்டான். பழம் எங்கே கிடைத்தது' என்ற வினாவுக்கும் யார் இதனைக் கொடுத்தார் கள் என்ற வினாவுக்கும் உள்ள வேற்றுமையைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அம்மையார் நடந்ததைக் கூறினார்; ஆனால் அந்த வணிகன் அதனை நம்பவில்லை. எனவே, t S S S S S S S S S S S S S S S S S S CS S S S S S மற்று இதுதான் தேசுடைய சடைப்பெருமான் திருவருளேல் இன்னமும் ஓர் ஆசில்கனி அவன் அருளால் அழைத்தளிப்பாய் என மொழிந்தான் " கனி வந்தது; அம்மையார் அவன் கையில் அக் கனியை இட்டார். 'வணிகனும் தன்கைப்புக்க மாங்கனி பின்னைக் காணான் தனிவரும்பயம் மேற்கொள்ள உள்ளமும் தடுமாறு எய்தி அணிகுழல் அவரை வேறோர் அணங்கெனக் கருதி நீங்கும் துணிவு கொண்டு எவர்க்கும் சொல்லான் தொடர்பின்றி ஒழுகுநாளில் ' என்பது கவிஞர் கூற்று. இந்தக் கணிக்கு அவன் உரிமையுடை யவன் அல்லன். சோதனை செய்வதற்காகவே கேட்டான். கனி வந்தது; அம்மையார் சோதனையில் வென்றுவிட்டார். கணவனை அச்சம் பற்றிக்கொண்டது. இறையருளின் ஆழத்தை யும் அதனை முழுவதும் பெற்ற மனைவியாரையும் அறிந்து கொள்ளும் நல்லூழ் இல்லாதவனுக்கு இந்தச் சாதாரணச் செயல் எல்லையற்ற அச்சத்தைத் தந்துவிட்டது. 'அணங்கு' என்பதும் அச்சச் சுவையைத் தரும் என்று தொல்காப்பியனார் கூறியபடியே மனைவியை அணங்கு என்று கருதிவிட்டான். இதனை விரிவாகவே கவிஞர் கூறிவிடுகிறார். திருவருளை அறிய முடியாதவர்கட்கு மட்டுமே அச்சம் தோன்றும் என்ற கருத்தையும் காப்பியக் கலைஞர் இங்குப் பெய்துவிட்டார். தவறு நிகழ்ந்த உடன் புகழ்ச்சோழன் கொண்ட அச்சம் புகழ்ச்சோழர் என்ற தொண்டருக்கும் அச்சம் தோன்று கிறது. சிவனடியார்களைச் சிவன் எனவே கருதிப் போற்றி வழிபடும் அவரிடம் போரில் வென்ற தலைகளைக் கொண்டு வருபவர்கள் பல தலைகளையும் காட்டினார்களாம். அத்தலை களுள் ஒன்றில் புன்சடை கொண்ட சிவனடியார் தலையும் இருந்தது.