பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாவது சுவை - r 535 'கண்டபொழுதே நடுங்கிமனம் கலங்கிக் கைதொழுது கொண்ட பெரும் பயத்துடனும் குறித்தெதிர் சென்று - . அது கொணர்ந்த திண்டிறலோன் கைத்தலையில் சடை தெரியப் பார்த்தருளி புண்டரிகத் திருக்கண்ணிர் பொழிந்திழிய....' " நின்ற மன்னன், 'திரை சரித்த கடலுலகில் திருநீற்றின் நெறி புரந்தியான் அரசளித்தபடி சால அழகிது...... 6 * எனக் கதறி, 'சீர் தாங்கும் இவர் வேணிச் சிரந்தாங்கி வரக்கண்டும் பார் தாங்க இருந்தேனோ? பழி தாங்குவேன்' என்று வருந்தினான். வணிகனின் அச்சமும் இந்தச் சோழரின் அச்சமும் ஒப்பு நோக்கத்தக்கன. வணிகனின் அச்சம், அறியாமையால் தெய்வ மகளை அணங்கென நினைத்தமையால் பிறந்த அச்சம். சோழ மன்னரின் அச்சம் தன்மேலேயே ஆகும். அச்சச் சுவைபற்றிக் கூற வந்த ஆசிரியர் தொல்காப்பியனார், 'அணங்கே, விலங்கே, கள்வர், தம் இறையென பிணங்கல் சாலா அச்சம் நான்கே' என்று கூறிப் போனார். இந் நூற்பாவில் வரும் பிணங்கல் சாலா என்ற சொல்லுக்கு 'தன் கட்டோன்றல், பிறன் கட்டோன்றல் என்றும் தடுமாற்றம் இன்றிப் பிறிது பொருள் பற்றியே வருமென்பது' என்றும் உரை வகுத்து உள்ளார் பேராசிரியர். அப்படியானால் ஒருவன் தானே தவறு செய்து விட்டதாகவோ, தவறு செய்துவிடக்கூடும் என்றோ அஞ்சும் அச்சத்திற்கு இங்கு இடம் இல்லாமல் போய் விடுகிறது. பாண்டியன் நெடுஞ்செழியன், 'யானோ அரசன்! யானே கள்வன்' என்று பேசும் சொற்கள் தன்கட்டோன்றிய அச்சம் தானே! எனவே சோழ மன்னன் 'திருநீற்றின் நெறி புரந்து யான் அரசளித்தபடி சால அழகிது என்று வருந்தும் பொழுது தன் கடமை தவறி விட்டதால் தோன்றிய அச்சமே இங்குப் பேசப்படுகிறது. 36