பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

536 பெரியபுராணம்- ஓர் ஆய்வு அறியாமையால் வரும் அச்சத்தைவிட அறிவின் முதிர்ச்சியினால் வரும் இந்த அச்சம் மிகவும் வலுவானது. அறியாமையால் வந்த அச்சம், அச்சந் தரும் பொருளிடமிருந்து ஓடிவிட வேண்டும் என்ற முடிவுக்குத் தூண்டுகிறது. அறிவின் ஆராய்ச்சியில் பிறந்த இந்த அச்சம் அக்குறையை நீக்க வழி தேடுகிறது. அது நீக்கப்பட முடியாத பொழுது தனக்குத் தானே தண்டனை வழங்கிக் கொள் கிறது. தனக்குத் துன்பம் வருமோ என்ற அச்சம் தாழ்வானது. பிற உயிர்கட்குத் தன்னால் துன்பம் நேர்ந்துவிடுமோ என்று அஞ்சும் அச்சம் மிகமிக மேலானது. தொல்காப்பியனார் நாடக வழக்கு, உலக வழக்கு என்பவற்றின் அடிப்படையில் மெய்ப் பாட்டியல் கூறினமையின் உரையாசிரியர் இந்த இரண்டாவது அச்சத்தைச் சிந்தித்துக் குறிப்பிடவில்லை. பெருமிதம் என்ற சுவை அடுத்துள்ள சுவை பெருமிதம் என்பதாகும். வீரம் என்றும் தனைக் கூறுவர். கல்வி, தறுகண், இசை, கொடை என்பவை காரணமாக இச்சுவை பிறக்கும் என்பர் இலக்கண நூலார். தறுகண்மை காரணமாகப் பிறக்கும் பெருமிதம் உடல் வன்மை, மன உறுதி, போர்ப் பயிற்சி என்பவை காரணமாகத் தோன்று மேனும் பிற கல்வி, இசை, கொடை என்பவைபற்றிப் பிறக்கும். வீரத்தில் உடல் வன்மைபற்றிப் பேச்சுக்கு இடம் இல்லை. நம் முன்னோர் உடல் வன்மைபற்றிப் பிறக்கும் பெருமிதம் அல்லது வீரம் என்பதை ஏற்றுக் கொண்டனர் என்பது உண்மைதான். ஆனால் வீரம் அதனுடன் நின்று விடுவதில்லை. கல்வி மிகுதி யாலும், இசை, கொடை என்பவற்றின் மிகுதியாலும் பெருமிதம் தோன்றலாம் எனக் கொண்டனர். பிற்காலத்தில் பெருமிதம் தோன்றுவதற்குரிய நிலைக்களங் கள் இன்னும் விரிந்தன! ‘வேண்டாமை அன்ன விழுச் செல்வம் ஈண்டில்லை யாண்டும் அஃதொப்பது இல் ' - என்ற குறட்பாவில் வேண்டாமையை மிகப் பெரிய போற்றத்தக்க செல்வம் என்று வள்ளுவர் குறித்ததையும் உளங் கொள்ள, வேண்டும். எனவே வீரம் என்ற சுவை மேலே கூறிய நான்காலும் பிறப்பது போல, வேண்டாமை என்ற பண்பினாலும் பிறக்கும். புலனடக்கம், இறைபக்தி, துறவுள்ளம் என்பவற்றினாலும் பிறக்கும் எனக் கண்டனர். . . . . .