பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாவது சுவை 5 ?7 'இறுமாந்து இருப்பன் கொலோ ஈசன் பல்கணத்து எண்ணப்பட்டு ' என்று வாக்கின் வேந்தர் கூறும் பொழுது இறைவனுடைய அணுக்கத் தொண்டர் தாம் என்ற நிலை வரும் பொழுது அங்கேயும் பெருமிதம் தோன்றும் என அறிய முடிகிறது. எறிபத்தர், ஏனாதி முதலியோர் புகழ்ச்சோழர் பட்டத்து யானை, சிவகாமியாண்டார் மலர் களைச் சிந்த விட்டது என்பதற்காக, தாம் ஒருவர் என்பதையும் யானையும் பாகர்களும் பலர் என்பதையும் கருதாமல் முன்னேறிச் செல்கிறார் எறிபத்தர். 'கண்டவர் இது முன்பு அண்ணல் உரித்த அக்களிறே போலும் அண்டரும் மண்ணுளோரும் தடுக்கினும் அடர்த்துச் சிந்தத் துண்டித்துக் கொல்வேன்'.......... என்று கூறிக் கொண்டே யானையின் துதிக்கையை வெட்டி வீழ்த்தினார் எறிபத்தர். இதனுடன் அமையாமல், ‘வெய்யகோல் பாகர் மூவர், மிசைக்கொண்டார் இருவராக ஐவரைக் கொன்று நின்றார் ...... 贾霸 என்று சேக்கிழார் கூறுகையில் எறிபத்தரின் வீரம் எங்கே இருந்து பிறந்தது என்பதையும் குறிப்பாகப் பெற வைக்கின்றார். எறிபத்தர் போர் செய்தலை முறையாகப் பயின்ற போர் வீரர் அல்லர். அப்படி இருக்கப் போர் புரிவதில் பயிற்சியுடைய பட்டத்து யானையை எவ்வாறு கொல்ல முடிந்தது? இவர் கொண்ட தைரியம் பைத்தியக்காரத்தனத்தால் பிறந்ததா? இன்றேல் அடிப்படை ஏதேனும் உண்டா? என்ற வினாவிற்குக் குறிப்பாக விடை தருகிறார் கவிஞர். இவர் சிவ பக்தர். தீங்கு செய்த யானையைக் கண்டவுடன் முன்னர் ஒரு காலத்தில் சிவ பெருமான் உரித்த யானையின் வரலாறு நினைவுக்கு வருகிறது. அன்று இறைவனுக்கும், இன்று இறைவனடியாருக்கும் தீங்கு செய்ய முற்பட்ட களிறு என்று நினைத்தவுடன் எறிபத்தர் உள்ளத்தில் ஒருவகை வீரம் பிறக்கிறது. 'யாதொன்று நினைக்கத்தான் அதுவாதல்' என்ற கொள்கையின்படி இறைவன் உரித்த செயலை நினைத்தவுடன் இறைவனின் வன்மையில் ஒரு பகுதி இவருக்கும் வந்து விடுகிறது. அதன் பயனாகவே யானை, பாகர் அனைவரையும் வீழ்த்தி நிற்கும் பெருமிதம் பிறக்கின்றது.