பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53.8 பெரியபுராணம்- ஓர் ஆய்வு ஏனாதிநாதர் போர் வீரர்களைப் பயிற்றுவிக்கும் பள்ளி நடத்தி வந்தவர்; ஆனால் தலைசிறந்த சிவனடியார். இவருக்குப் போட்டியாக அதிதுரன் என்பவனும் ஒரு பள்ளி நடத்தி வந்தான். இரு பள்ளிப் பயிற்சியாளரும் தம்முள் பொருதனர். ஏனாதியார் ..கை வலுத்திருந்தது. அதிதுரன் போரினால் இவரை வெல்லல் அரிது எனக் கண்டு, இவர் சிவபக்தர் ஆதலால் அதனையே துணையாகக் கொண்டு இவரைக் கொல்ல முடிவு செய்தான். ஒற்றைக்கு ஒற்றையாக நின்று புரியும் போரை ஏற்பதாகக் கூறி அவரையும் ஏற்கச் செய்தான். போர் நடைபெறும் வேளையில் தன்கையில் உள்ள கேடயத்தால் அதுவரை மறைந்திருந்த தன் நெற்றியைக் காட்டினான். ஏனாதியார் தம் எதிரே நின்று போர் புரியும் தாயத்தானும் பகைவனுமாகிய அதிதுரனை மறந்து அவனைச் சிவனடியாராகவே கண்டார். சிவனடியார் யாராக இருப்பினும் அதுபற்றிக் கவலைப்படாமல் அவர்கள் வேண்டி யதைத் தருவதுதானே பக்தர்கள் குறிக்கோள். எனவே போர் புரியாமல் அதே நேரத்தில் புரிவது போன்ற பாவனையுடன். அப்படியே நின்று விட்டார். பாவனை ஏன் எனில் நிராயுத பாணியைக் கொன்ற குற்றம் அவனுக்கு எய்திவிடக் கூடாதே என்பதற்காக அவ்வாறு பாவனையுடன் நின்றார்; அதிதுரன் ஏனாதியைக் கொன்று விட்டான். கொள்கைக்காக உயிர் விடுவது சரியா? இப்பொழுது ஏனாதியாரின் செயலை வைத்து அவரைப் போரில் வென்றவர் என்று கூறுவதா? அன்றேல் தோற்று உயிரை விட்டவர் என்று கூறுவதா? பகைவன் என்று அறிந்திருந்தும் சிவ வேடம் அணிந்தமைக்காகத் தம் உயிரைத் தியாகம் செய்பவரை வீரர் என்று கூறாமல் வேறு என்ன கூற முடியும்? எதிரே உள்ளவன் யார் என்று அறிந்துள்ளமையின் இவருடைய கொள்கையை மாற்றிக் கொண்டிருப்பின் பெரிய புராணத்தில் இடம் பெற முடியாது. எதிரில் உள்ளவர்கள், எதிரில் நடப்பவை, எதிரில் உள்ளவர்கள் செய்கின்ற செயல்கள் என்பவற்றிற்கேற்பச் செயல்படும் இயல்பு மனிதர்கட்கு இயல்பாக அமைந்துள்ள ஒன்றாகும். சராசரி மனிதர்கள் அனைவரும் அதனைத்தான் செய்வர். இதுபற்றிக் கவலைப்படாமல் தம் கொள்கை, தம் குறிக்கோள், தம் மனத்திற்பட்ட முடிவு என்பவற்றிற்கேற்பச் செயல்படுபவர்கள் தொண்டர்கள், பக்தர்கள், அடியவர்கள். எனவேதான் ஏனாதிநாதனாரின் மன நிலை நம்போன்றவர் கணிப்பில் அகப்படாது என்பதைச் சேக்கிழார், -