பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாவது சுவை - 5 39 'கைவாளுடன் பலகை நீக்கக் கருதியது செய்யார் நிராயுதரைக் கொன்றார் எனுந்தீமை எய்தாமை வேண்டும் அவர்க்கு என்று இரும்பலகை நெய்வாளுடன் அடர்த்து நேர்வார்போல் நேர்நின்றார். 'அந்நின்ற தொண்டர் திருவுள்ளம் ஆர் அறிவார்? முன்னின்ற பாதகனும் தன் கருத்தே முற்றுவித்தான் "' என்று பாடிச் செல்கிறார். கொள்கைக்காகத் தம் உயிரையே வழங்குதலின் இதுவும் கொடைபற்றி வந்த பெருமிதம் என்றே கொள்ளப்படும். விளக்கம் மெய்ப்பொருளாளரைப் பொறுத்தமட்டிலும்கூட இதே நிலைதான். வந்தவன் முனிவர் வேடம் தாங்கியிருப்பினும் அவனுடைய முகத்தைக் கொண்டே இவன் தீயவன் என்பதை உள்வாயில் காவலனான தத்தன் என்பவன் கண்டு கொண்டான் என்கிறார் கவிஞர். வாயிற்காவலன்கூடத் தீயவன் என்று அறிந்துகொள்ளக்கூடிய ஒருவனை மெய்ப்பொருள் மன்னன் அறிந்து கொள்ளவில்லை என்று கூறுவது சரியன்று. என்றால் வந்தவன் யார் என்று அறிந்திருந்தும் மெய்ப்பொருள் வந்தவனைப்பற்றிக் கவலைப்படாமல் அவனுடைய வேடத்துக்கு மதிப்புக் கொடுத்தார்; அந்த வேடத்ததை உடையவன் விரும்பி யமையின் தம் உயிரையும் தியாகம் செய்கிறார் என்றுதான் கொள்ளவேண்டும். இல்லாவிடில் துறவி வேடத்துடன் வந்தவனைக் கொல்ல முன் வந்த தத்தனை, 'நிறைத்த செங்குருதி சோர வீழ்கின்றார் நீண்ட கையால் தறைப்படும் அளவில் தத்தா நமர்! எனத் தடுத்து வீழ்ந்தார்’ என்று சேக்கிழார் பாடுவது பொருளற்றதாகிவிடும் இம்மாதிரி வரலாறுகளைக் காண்கின்றவர்கள் உலகியல் முறையில் பேசப் படும் வெற்றி தோல்வி என்பவற்றிற்கும் புதிய பொருள் காண வேண்டியுள்ளது. போரில் அல்லது சாதா நேரத்தில்கூட கொல்லப்பட்டவர் தோற்றதாகவும், கொன்றவர் வென்ற தாகவும் கொள்வது மரபு. அது தவறு எனக் காட்டவே இவ்வரலாறுகள் பேசப்படுகின்றன. 'சாதலும் புதுவது அன்றே ' என்ற புறநானூற்றுத் தொடர்ப்படி இவர்கள் சாவை என்றுமே பெரிதாகக் கருதியதில்லை. சங்கிலித் தொடர் போன்ற பிறப்பு இறப்புக்களில் இப்பொழுது எடுத்துள்ள உடம்பு ஒரு கணுவாகும். எனவே இந்த உடம்பு வீழ்ந்து விடுவது சங்கிலியில் ஒரு கணு 7 &