பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 0 பெரியபுராணம்- ஓர் ஆய்வு போவதேயாகும். ஆதலின் சாவை வைத்து வெற்றி தோல்வியை இவர்கள் கணக்கிடவில்லை. தாம் கொண்ட கொள்கையை விடாமல் இருக்க உயிரைத் தந்தாலும் அது வெற்றி என்றே பேசப் பட்டது. ஆறு அறிவு படைத்து எதனையும் ஆராயும் ஆற்றலுடைய மனிதன், ஒருவனை இன்னார் என்று அறிந்திருந்தும் அவன் அணிந்திருக்கின்ற வேடத்திற்காகத் தன் உயிரையும் தியாகம் செய்வது அறிவிற்குப் பொருந்துமா? என்ற வினா எழலாம். இந்த வினாவிற்கு நேரிடையாக விடை கூறமுடியாது. எனினும் உலகம் தோன்றிய நாள் தொட்டே இப்படிச் சிலர் இருந்துள்ளனர் என்பதை உலக வரலாறு நமக்கு அறிவிக்கின்றது. 1 மீட்டர் அகலமும் 11 மீட்டர் நீளமும் பல நிறங்களுமுடைய துணியை யாரும் பெரிதாக மதித்துச் சட்டை செய்ய மாட்டார்கள். ஆனால் அதே துணியை ஒரு கம்பியில் கட்டித் துக்கி நிறுத்தி விட்டால் அது அந்த நாட்டுக் கொடி என்ற பெயரைப் பெற்று விடுகிறது. அந்தச் சிறு துணியைக் காப்பதற்கு நூற்றுக் கணக்கானவர்கள் உயிரை விடுவர். திருப்பூர்க் குமரன் இன்றும் புகழப்படுவது இந்தச் சிறு துணியைக் கீழே விழாமல் காப்பாற்றிய தற்காகவே யாகும் என்பதை மறந்து விடலாகாது. இதன் காரணம் யாது? அந்த நாட்டின் மானம், சிறப்பு, பெருமை என்பவற்றின் அடையாளமாக அக்கொடி மதிக்கப்படுகிறது. எனவே அதைக் காக்கச் செய்யப்படும் எத்தகைய தியாகமும் நியாயமானதாகப்படுகிறது. பல பகைவர் மத்தியில் தனி ஒருவன் இக்கொடியைப் பாதுகாக்கப் போராடுகிறான். பகைவர் பலருக்கும் அது சிறு துணிதான். ஆனால் அதனைக் காக்கப் போராடும் ஒருவனுக்கு அது நாட்டு மானம் காக்கும் கொடி. அது போல சிவத் தொண்டர்கட்குச் சிவவேடம் என்பது உடம்பின் மேல் அணியப்பட்டுள்ள வேடமன்று. அவ்வேடம் சிவபெருமானாகவே மதிக்கப்படுகிறது. பிற்காலத்தில் எழுந்த சிவஞான போதம் இந்த நுணுக்கத்தை நன்கு அறிந்திருந்தமை யாலதான, 'மாலற நேயம் மலிந்தவர் வேடமும் ஆலயந்தானும் அரன் எனத் தொழுமே என்று கூறிற்று. எனவே அவ்வேடத்தின் எதிரே அதற்குத் தாழ்வு வாராமல் தம் உயிரைத் திரணமாக மதித்து வழங்குகின்றனர். இவ்வாறு வழங்குபவர்களை, ஆகப் பெரிய தியாகத்தைச் செய்பவர்களை வீரர் என்று கூறுவதில் தடை என்ன இருக்க முடியும்? 8 ()