பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் காப்பியங்களின் தோற்றமும் வளர்ச்சியும் 3 6.3 இரண்டு அரசர் போரிட்டு இருவரும் மடிந்தது கண்டு வருந்திய புலவன் "வேந்தரும் பொருதுகளத் தொழிந்தனர் இனியே என்னா வது கொல் தானே காமர் இடக்கை அவர் அகன் தலை நாடே “ என்று பாடும்பாடலும் இதில் உண்டு. இரு வேந்தரிடைத் துது சென்றவர்கூறிய பாடலும் உண்டு. பல யாகங்கள் செய்த கவுணி யன் விண்ணந்தாயன் என்ற அந்தணனைப் புகழ்ந்த பாடலும் இதில் உண்டு. ' பார்ப்பனவாகை, கையறுநிலை, மூதின்முல்லை, தாபதநிலை, தாபதவாகை, முதுமொழிக் காஞ்சி முதலிய துறை களில் உள்ள பாடல்கள், என்றோ நிகழ்ந்த வீர நிகழ்ச்சியைப் பற்றிப் பாடப்பெறும் வாய்மொழி இலக்கியங்கள் அல்ல என்பது வெளிப்படை. அன்றியும் கபிலர், பரணர், ஆவூர் மூலங்கிழார் போன்ற கவிஞர்கள் பாடிய பாடல்களை வாய் மொழிப் பாடல்கள் என்பது வியப்பே கபிலரைப்பற்றிக் கூறவந்த மாறோக்கத்து நப்பசலையார் என்ற புலவர் பெருமாட்டியார், 'புலன் அழுக்கு அற்ற அந்தணாளன், இரந்து செல் மாக்கட்கு இனிஇடன் இன்றிப் பரந்து இசை நிற்கப்பாடினன்' " என்று பாடிச் செல்கிறார். 'இசை நிற்கப் பாடினன்' என்ற காரணகாரிய அடிப்படையில் இறந்தகாலத்தை அறிவிக்கும் தொடர் இப்புலவர் பெருமாட்டியார் கபிலருக்குப் பின்னர் வாழ்ந்தவர் என்பதை அறிவுறுத்தும். அப்படியானால் கபிலருடைய பாடல்களை இவர் எங்ங்னம் கற்று அதில் ஈடுபட்டிருக்க முடியும்? எழுத்தில் அக் கவிதைகள் இருந் திருந்தாலன்றிப் 'ப்ரந்து இசை நிற்க என்று கூறுவது வெற்றுரையாகவே முடியும். பாரியின் உயிர் நண்பராக அவருடனேயே வாழ்ந்து அவன் மகளிரைத் தம்மகளிர் என்று கூறும் அளவுக்கு உரிமையுடையவராய் வாழ்ந்த கபிலரை வாய் மொழிப் பாடல் பாடும் பாணர் குழுவில் சேர்ப்பது நினைக்கவும் இடந்தராத ஒன்றாகும். என்றாலும் இப் புலவர் பெருமானே தம்மை "யானே பரிசிலன் என்றும், 'அந்தணன் புலவன்’’’ என்றும் கூறிக்கொள்கிறார். இவ்வாறு புலவர்கள் தம்மைப் பாண ராகப் பாவித்துக்கொண்டு பாடுதல் அந்நாளைய மரபாகும். இப் பாடல்களைக் கொண்டு கபிலர் முதலியோரை வாய்மொழிப் பாடல் பாடும் பாணர் என்பது இலக்கிய மரபை அறியாதவர் கூற்றே ஆகும்.