பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாவது சுவை 5 4 1 இதற்கு அடுத்தபடியாக உள்ள வீரர்கள் எறிபத்தரைப் போலவோ ஏனாதியைப் போலவோ உலகமுறைப் போரில் ஈடுபட்டவர் அல்லர். ஆனால் இவர்களும் ஒருவகைப் போரில் ஈடுபட்டவர்களே யாவர். ஏனையோர் புறத்தே உள்ளவர்களிடம் போரிட்டனர். இவர்கள் அகத்தே உள்ள பகைவர்களிடம் போரிடு கின்றனர். புறப்பகையைவிட இந்த அகப்பகை வலிமையானது; கொடியதும் கூட. வஞ்சகமாக ஏமாற்றி வெற்றி கொள்ளக்கூடிய பகையாகும் இது. எனவே இவற்றுடன் போர் தொடுத்து வெற்றி பெறுபவர்களை வீரர்கள் என்று பெரிய புராணம் பேசுகிறது. ஐம்புலன்கள் என்று பேசப்பெறும் இப் பகைவர்களை வெல்வது அவ்வளவு எளிதன்று. திருஞானசம்பந்தர் ஜீவன் முக்தராக இருந்தும்கூட இவற்றின் கொடுமையைப் பாடுகிறார். 'வஞ்சம் உண்டென்று அஞ்சுகின்றேன் வலிவலமேயவனே!" 'ஆயமாய காயந்தன்னுள் ஐவர் நின்று ஒன்ற லொட்டார் மாயமே என்று அஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே!’ 'ஆதிநாளும் உன்னையேத்தும் என்னை வினை அவலம் வாதியாமே வந்து நல்காய்.......... * என்று இளங் குழந்தையாகிய பிள்ளையார் இவ்வாறு பாடுவது போலவே, மற்றோர் இளங் குழந்தையாகிய நம்மாழ்வாரும் இதே கருத்தைப் பாடுகின்றார். 'வேதியா நிற்கும் ஐவரால் வினையேனை மோதுவித்து உன்திருவடி சாதியா வகைநீ தடுத்து என்பெறுதி: 'விண்ணுளார் பெரு மாற்கு அடிமை செய் வாரையும் செறும் ஐம்புலன் இவை மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா? மற்று நீயும்விட்டால்...... * 8.2 எனவேதான் இப் பொறிபுலன்களை வென்றவர்களை வீரர் ள் என்று பாராட்டும் மரபு இந்நாட்டில் தோன்றிற்று, புல.ை டக்கமே மிகப்பெரிய சாதனையாயினும் அதை மட்டும் செய்த வர்களை ஒரளவுக்குப் பாராட்டினாலும் முழுவதுமாக ஏற்துக் கொள்ளவில்லை. இதற்கும் மேம்பட்ட படியாக உள்ளத் துறவை போற்றினர். அதற்கும் அடுத்தபடியாக அகங்கார மமகாரங்களைச் செற்றவர்களைப் போற்றினர். இவை அனைத்தையும் பெற்றாலும் காட்டுக்கு ஓடிக் கனசடை வளர்த்