பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

542 பெரியபுராணம்- ஓர் ஆய்வு துத் தங்கள் முன்னேற்றத்தை மட்டும்_கருதியவர்களை ஒருபடி தாழ்வாகவே கருதினர் இத்தமிழர். இத்தனையும் பெற்றாலும் தாம் தோன்றிய சமுதாயத்தில் தங்கியிருந்து, தம்மைப் பெற்று வளர்த்து ஆளாக்கித் தம் சோதனைகளைத் தொடர்ந்து செய்து சம திருஷ்டி உடையவர்களாக வளர்வதற்கு உதவிபுரிந்த சமுதாயத்தை மறவாமல் தொண்டு செய்தவர்களையே தலையாய வீரர்கள் என்று இந்நாட்டார் போற்றினர். இவ் வீரர்கள் வாழ்வில் தன்னலம் என்பதோ, தான் என்ற முனைப்போ. பொறிபுலன்கள் ஆட்சிக்குட்பட்டு வாழ்வதோ எதுவும் கடுகளவும் இல்லை. இவை அனைத்தும் ஒழிந்தமையின் ஆசை என்ற, தவாஅப் பிறப்பினும் வித்து இவர்களிடம் வளர வழியேயில்லை. பற்றை அறவே எறிந்தவர்களாகலின் இவர்கள் செயல்கள் அனைத்தும் பிறர் பொருட்டாகவே செய்யப்படுவனவாயின. பல சமயங்களில் அச் செயல்கள் கடுமையுடையனவாக இருப்பினும், (எறிபத்தர், சண்டேசர், மூர்க்கர், சக்தி போன்றவர்கள் செயல்கள் இவ் வகைக்கு உதாரணம்) அவற்றின் அடியில் தன்னலமோ வெறுப்போ காழ்ப்புணர்ச்சியோ சிறிதும் இல்லை. ஆதலின் இது தலைசிறந்த வீரமாகக் கருதப் பெற்றது. இதன் எதிராகப் பிறர் செய்யும் கொடுமைகளைப் பொறுத் துக் கொண்டு அவற்றின் எதிராக முணுமுணுத்தல்கூடச் செய்யா மல் (நாவரசர் வாழ்க்கை இதற்கு உதாரணம்) இருப்பது மற்றோர் வகை வீரமாகும். மூன்றாவது வகையான ஒரு வீரமும் பெரியபுராணத்துள் இடம் பெறுகிறது. தாம் கொண்ட கொள்கையை விடாது பற்றி நிற்பதும் அதனை விட்டுவிடுமாறு இறைவனே கூறினாலும் 'விடமாட்டேன்’ என்று கூறிவிடுவதும் இம் மூன்றாவது வகைப் பெருமிதம் அல்லது வீரமாகும். சிவகோசரியார் ஆகம விதிப்படிப் பூசை செய்பவர். அவருக்குத் தெரியாமல் திண்ணனார் அன்பே வடிவமாக நின்று ஆகமம் விலக்கிய அத்தனையுங் கொண்டு பூசை செய்கிறார். இந்நிலையில் இறைவன் சிவகோசரியார் கனவில் வந்து மற்றவன் வடிவெல்லாம் நம்பக்கல் அன்பு என்று கூறிய துடன் அமையாது,