பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாவது சுவை 5 4 3 ‘வெய்யகனல் பதங்கொள்ள வெந்துளதோ எனும் அன்பால் நையும் மனத்து இனிமையினில் நையமிக மென்றிடலால் செய்யும்மறை வேள்வியோர் முன்புதரும் திருந்தவியில் * எய்யும் வரிச் சிலையவன் தான் இட்ட ஊன் எனக்கினிய..." என்றும் கூறிவிட்டு, 'உனக்கு அவன்தன் செயல்காட்ட நாளை நீ ஒளித்திருந்தால் எனக்கு அவன்தன் பரிவிருக்கும் பரிசெல்லாம் காண்கின்றாய் “ என்று கட்டளையிட்டுப் போயினார். இவருடைய ஆகம விதிப்படி நடைபெறும் வழிபாட்டை ஏற்றுக் கொள்ளுகின்ற அந்தப் பரம்பொருளே வந்து இவ்வாறு கூறிவிட்டுப் போனபின் சிவகோசரியார் இதுபற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்றுதான் நாம் நினைப்போம். ஆனால் விதிமார்க்கத்தில் ஒழுகும் சிவகோசரியார் இறைவனே கூறினாலும் அதனை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. எனவே மறுநாள் முன்னதாக வந்து பூசை முடித்து ஒளிந்திருந்து திண்ணன் செயலைக் காணவந்தவர் முதல் நாளிரவு இறைவனே கூறி விட்டான் என்பதால் தம் கொள்கையை விட்டுவிடாமல் அன்றும் திண்ணன் வைத்திருந்த அனுசிதத்தைக் கூட்டித் துப்பரவு செய்துவிட்டு மறுபடி ஆற்றில் சென்று குளித்துவந்து பூசனை செய்தார். கொள்கையின் எதிரே கடவுளையும் ஒதுக்கும் இதுவும் ஒருவகை வீரமாகும். ஏயர்கோன் வீரம் ஏயர்கோன் கலிக்காமர் என்பவர் திருப்பெருமங்கலம் என்ற ஊரில் வாழ்ந்தவர். சுந்தரருடன் சமகாலத்தில் வாழ்ந்தவர். சோழர்கட்குச் சேனாதிபதியாக இருக்கும் சிறப்பு வாய்ந்தது, ஏயர்கோக்குடியாகும். அக்குடியில் தோன்றியவர் கலிக்காமர் என்ற இந்த அடியார். சுந்தரர் பரவையார்பால் இறைவனைத் தூதாக அனுப்பினார் என்னுஞ் செய்தி கேட்டதும் மனம் கொதித்தார். 'நாயனை அடியான் ஏவும் காரியம் நன்று சால ஏயும் என்று இதனைச் செய்வான் தொண்டனாம்! என்னே! பாவம்! பேயனேன் பொறுக்கஒண்ணாப் பிழையினைச் . - செவியாற் கேட்பது ஆயினபின்னும் மாயாது இருந்தது ஆவி என்பார்