பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

544 பெரியபுராணம்- ஓர் ஆய்வு 'காரிகை தன்பால் செல்லும் காதலால் ஒருவன் ஏவப் பாரிடை நடந்து செய்ய பாததா மரைகள் நோவத் தேரணி வீதியூடு செல்வது வருவதாகி ஒர் இரவெல்லாம் தூதுக்கு உழல்வராம் ஒருவர்...' 8 என்ற முறையில் அவர் வாதமும் அதனால் விளையும் கோபமும் வெளியிடப்பட்டன. இறைவன் அடியார்க்கு எளியனாக இருக் கிறான் என்பதால் இத்தகைய அற்பமான செயல்களில் அவனை ஈடுபடுத்துவது மாபெரும் பாதகம் என்ற நினைவுடையவராய் இருந்தார். இறைவன் இந்த நல்லவர்கள் இருவரையும் சேர்த்து வைக்கக் கருதிக் கலிக்காமருக்கு வயிற்றுவலியை உண்டாக்கி னான். எவ்வகை மருந்திலும் தீராததாக இருந்தமையின் வலியால் வாடும் கலிக்காமரின் கனவில் தோன்றி, 6 'வந்து உனை வருத்துஞ் சூலை வன்தொண்டன் தீர்க்கில் அன்றி முந்துற ஒழியாது." என்று கூறினான். இவ்வாறு பேசுபவன் இறைவன் என்று அறிந்திருந்தும் கலிக்காமர் தன் சினத்தை அவர்மேல் காட்டினார். - . “எம்பிரான் எந்தை தந்தை தந்தை எம்கூட்டம் எல்லாம் தம்பிரான் நீரே என்று வழிவழி சார்ந்து வாழும் இம்பரின் மிக்க வாழ்க்கை என்னை நின்று ஈரும் சூலை வம்பென ஆண்டு கொண்டான் ஒருவனே தீர்ப்பான் வந்து? 'மற்றவன் தீர்க்கில் தீராது ஒழிந்தெனை வருத்தல் நன்றால்: பெற்றம்மேல் உயர்த்தீர்! செய்யும் பெருமையை அறிந்தார் யாரே?' ' என்று முடிவாகக் கூறிவிடுகிறார். அவருடைய கொள்கையின்படி எஜமானை அடிமை ஏவக்கூடாது. இறைவன் எஜமான்; உயிர்கள் அவன் அடிமைகள். எஜமான் எவ்வளவு கருணை யுடன் எதனையும் செய்ய முன்வந்தாலும் அடிமை தன் எல்லையை அறிந்துகொண்டு அதனை மீறல் தகாது. அவ்வாறு மீறினவன் அடியான் அல்லன். தெளிவான இந்த வாதத்தின் அடிப்படையில் நிற்கும் அவர், மேலும் ஒரு வாதத்தைக் கூறுகிறார். 'பெருமானே! நான், என் தந்தை, அவன் தந்தை, அவன் தந்தை என்று எங்கள் பரம்பரை முழுவதும் நீரே தலைவர் என்றும் நாங்கள் அடிமைகள் என்றும் வாழ்ந்து வருகிறோம். இத்தகைய எனக்கு வரும் நோயை நீர் தீர்க்காமல், நீராகச் சென்று வலிய ஆட்கொண்டு வந்த ஒருவன் புதிதாகத் தொண்ட