பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாவது சுவை 54.5 னானவன் வந்து என்னுடைய நோயைத் தீர்ப்பதா? அதைவிட நோய் தீராமல் இறப்பதே மேல் என்று கூறினார். இவருடைய வாதத்திலும் தவறு இல்லை. இறைவனே நேர் நின்று கூறினாலும் தம் கொள்கையை, அதாவது அடிமை, தலைவனை ஏவக்கூடாது என்ற கொள்கையை, விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. தம் கொள்கையின்மாட்டுக் கொண்ட பிடிப்பால் இறைவனையும் அவன் கட்டளையையும் ஒதுக்கும் இதுவும் ஒருவகை வீரந்தான். சிவகோசரியாரது பிடிவாதமான கொள்கைப் பிடிப்பில் அகங்காரம் இல்லை. திண்ணனாரை இழிவாக நினைக்கவில்லை. தாம் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்கிறாரே தவிர இறைவன் திண்ணனை ஏற்பதில் சிவகோசரிக்குத் தடை இல்லை. தன் வழிதான் சிறந்தது என்று அவர் கருதுவதில் தவறு இல்லை. மற்றவன் வழி தவறு என்று கூறினால்தான் தவறு நேரிடும். கலிக்காமரைப் பொறுத்தமட்டில் இந்தத் தவற்றைச் செய்கிறார். சுந்தரர் செய்ததை அவர் ஏற்றுக்கொள்ளாமல் விட்டுவிடலாம். இறைவனே அதனை ஏற்றுக்கொள்ளும் பொழுது இவர் அதனை எதிர்த்துப் போராடுவதில் பொருளில்லை. தான் ஏற்றுக் கொள்ளாததும் உலகில் இருக்க நியாயம் உண்டு என்ற கொள்கையை மறுப்பவர் கலிக்காமர். ஆகவேதான் 'நான் அவனைக் காணும் நிலை ஏற்பட்டால் என்ன ஆகும் தெரியுமா? என்று பல்லைக் கடிக்கும் அளவிற்குச் சென்று விடுகிறார். இறைவனையும் ஒதுக்கிவிடும் வீரம் ஒப்பற்றதாயினும் அதனடியில் அகங்காரம் மறைந்து நிற்றலால்தான் அவர் வயிற்றைக் குத்திக் கொள்கின்ற வரை இறைவன் விட்டு விடுகிறான். அவர் வயிற்றைக் கிழித்துத்தான் அவருடைய அகந்தைக் கிழங்கை அகழ்ந்து எடுக்க வேண்டியதாயிற்று. இவ்விரண்டு பேரும் (சிவகோசரியும், கலிக்காமரும்) எல்லை மீறிய வீரமுடையார் எனினும் சேனாபதித் தொழிலுடையார் ஒரளவு அகங்காரம் உடையவராகிறார்; சிவகோசரியார் அது இல்லாதவராகிறார். மனைவியார் வாய்தவறி, என்னை என்று கூறுவதற்குப் பதிலாக எம்மை என்று கூறிவிட்டாராகலானும், திருநீலகண்டத் தின் மேல் ஆணை வைத்துவிட்ட காரணத்தாலும் '.....எம்மை என்றதனால் மற்றை, மாதரார் தமையும் என்தன் மனத்தினும் தீண்டேன்." என்று சபதம் எடுத்து இறுதிவரை அதனைக் காக்கின்றார் ஒரு வீரர்.