பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாவது சுவை 5全7 வெறுப்பு உண்டாகக் காரணம் என்ன?’ என்று சில சமயங்களில் சிலரை நாமேகூடக் கேட்கிறோம் அல்லவா? இத்தகைய தவிர்க்க முடியாத வெறுப்புத் தோன்றும் பொழுது அதன் விளைவாகத் தோன்றுவதே வெகுளி என்னும் சுவையாகும். 'குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது. ’’ என்று வள்ளுவர் கூறும்பொழுது இச்சொல்லின் பொருள் ஆழத்தை அறிந்தே கூறுகிறார். எறிபத்தர் மன்னனுடைய யானை, பாகர் என்பவர்கள் மேல் காட்டியது வெகுளி எனப்படும். அவரைப் பொறுத்தமட்டில் வலியனாகிய அரசனுடைய யானையும் அதன் பாகர்களும் தம் அதிகாரச் செருக்கின் காரணமாகவே எளியாராகிய சிவகாமி யாண்டாரின் பூக்களை யானை பறித்துச் சிந்த இடம் கொடுத்தனர். யானை ஐந்தறிவுடைய பிராணி, அதைப் பொறுத்தமட்டில் சிவ பூசைக்குரிய பூவை இனங் கண்டு கொண்டிருக்க முடியாது என்ற வாதம் அவருடைய வெகுளி காரணமாக மனத்தில் ஏறவே இல்லை. எளியாரை வலியார் துன்புறுத்திவிட்டார்கள். (அலைத்துவிட்டார்கள்), எனவே எளியாருக்கு உதவியாகத் தாம் சென்று அந்த வலியாரைத் தண்டிக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நின்றது. இதனாலேயே அரசனை நேரே கண்ட பொழுதும் ஒரு சிறிதும் மரியாதையோ அச்சமோ காட்டாமல் தம் வெகுளிக்குக் காரணம் யாது என்பதை மிக அலட்சியத்துடன் அடியார், 'சென்னி இத்துங்க வேழம் சிவகாமியாண்டார் கொய்து பன்னகா பரணர்ச் சாத்தக் கொடுவரும் பள்ளித் தாமம் தன்னை முன் பறித்துச் சிந்தத் தரைப்படத் துணித்து வீழ்த்தேன்' ' மாதங்கம் தீங்கு செய்ய வருபரிக்காரர் தாமும் மீதங்குக் கடவுவாரும் விலக்கிடாது ஒழிந்துபட்டார் ஈது இங்கு நிகழ்ந்தது...' என்று கூறி நிறுத்திவிட்டார். இதனைக் கேட்ட மன்னன், ‘......... அஞ்சி பாதங்கள் முறையால் தாழ்ந்து.... அங்கணர் அடியார் தம்மைச் செய்த இவ்வபராதத்துக்கு இங்கிது தன்னால் போதாது என்னையும் கொல்ல வேண்டும்.' என்று வேண்டுகிறான். அரசன் எவ்வாறு இந்த முடிவுக்கு வந்தான்? எறிபத்தரின் கட்சி வாக்குமூலத்தை மட்டுங் கேட்டுக் g 5