பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

548 பெரியபுராணம்- ஓர் ஆய்வு கொண்டு மன்னன் இந்த முடிவுக்கு வந்தது சரியா? என்ற வினா நியாயமானதேயாகும். அதற்குரிய விடையைச் சேக்கிழார் வரன்முறைப் படுத்தியே நல்குகின்றார். 'வென்றவர் யாவர்? என்று அவன் கேட்கின்ற நேரத்தில் பகைவர்களே தன் யானையைக் கொன்றவர்கள் என்ற முடிவில் இருந்துவிட்டான். கூட்டத்தார் நின்ற மன்னனை நோக்கி பரசுமுன்கொண்டுநின்ற இவர்' என்று விடை கூறினவுடன் மன்னன் மனத்தில் தோன்றிய முதல் எண்ணம், 'குழையணி காதினானுக்கு அன்பராம் குணத்தின் மிக்கார் பிழைபடின் அன்றிக் கொல்லார் பிழைத்ததுஉண்டு ' என்பதாகும். இத்துணைத் துணிவான முடிவிற்கு வர இவ்வரச னால் எவ்வாறு முடிந்தது? ஆம்! அவனும் ஒரு தொண்டனே யாவான். ஒரு தொண்டன், பக்தன், மற்றொரு தொண்டனுடைய செயலை வைத்து அவனுடைய மனநிலையை எளிதில் அறிந்து கொள்ள முடியும். அதனால்தான் மன்னன் எதிர்க் கட்சியை விசாரியாமலே 'பிழைத்தது உண்டு என்ற முடிவுக்கு வந்து விட்டான். இத்துணைக்கும் காரணம் எறிபத்தரின் வெகுளியே யாகும். குணம் என்னும் குன்றேறி நின்ற பக்தராகிய எறிபத்தரின் வெகுளியின் விளைவே யானையின் இறப்பு என்பதை மன்னன் நன்கு கண்டு கொண்டான். எறிபத்தரின் வெகுளி, வெளியே தெரிகின்ற நிலையில் வெளிப் பட்டது. அந்த வெகுளியை விளக்க வந்த சேக்கிழார், 4.

  • * * * * * * - - - - - - so e எரிவாய் சிந்தும் அங்கையின் மழுவும் தாமும்

அனலும் வெங்காலும் என்னப் பொங்கிய விசையிற் சென்று பொருகரி தொடர்ந்து பற்றும் செங்கண்வாள் அரியிற்கூடிக் கிடைத்தனர் சீற்றம் மிக்கார் ' என்று கூறுகிறார். இதன் எதிராக வெளியே ஒரு சிறிதும் தெரியாமல் மூளாத் தீப்போல் உள்ளே கனன்று வரும் வெகுளியும் உண்டு. வசதியான வாழ்க்கையும் அழகான மனைவியையும் பெற்றிருந்தும் திரு நீலகண்டர் இளமை மீதுர இன்பத் துறையினில் எளியராகி விட்டார். இறைவனின் திருநீலகண்டத்தினிடத்து எல்லை யில்லாத பக்தி பூண்டுள்ள அவர் . ஆங்கு ஒர் பரத்தைபால்