பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதர்வது சுவை 54 9 அணைந்து மீண்டார். இதனை அறிந்த அவர் மனைவியார் ஊடல் கொண்டார். கணவன் தவறு கண்ட வழி அவன் மேல் ஊடல் கொள்ளுதல் மகளிர்க்கு மரபேயாகும். எனவே தம் மனைவிக்குத் தோன்றிய ஊடல் ஏனைய மகளிர்க்குத் தோன்றுவது போன்ற சாதாராண ஊடல் என நினைத்த திருநீலகண்டர் அந்த ஊடலைத் தணிக்க வேண்டி அவரைத் தழுவிக்கொள்ளப் புறப்பட்டார். ஆனால் அம்மையாரின் ஊடல் வேறுவகையானது என்கிறார் சேக்கிழார். கணவன் தவற்றினால் சினங்கொண்டு அதன் பயனாக ஊடல் தோன்றினால் அதனைத் தணிக்க முடியும். ஆனால் சினம் வெகுளியாக மாறிவந்த ஊடல் இதுவாகும். எனவே அதனைத் தணிப்பது இயலாத காரியம் அம்மையாரின் வெகுளி கணமேயும் காத்தல் இயலாத வெகுளி யாகும். இதனைக் கூறவந்த கவிஞர், மானம் முன் பொறாது வந்த ஊடலால் மனையின் வாழ்க்கை ஏனைய எல்லாஞ் செய்து உடனுறைவு இசையாரானார்' என்று பேசுகிறார். மானம் என்பது மனிதன் தன் நிலையல் தாழாமையும், தெய்வத்தால் தாழ்வு நேர்ந்துழி உயிர் வாழாமையுமாம். கணவன் செய்தது பெண்குலத்துக்கே மாபெரும் அவமானம் என அம்மையார் கருதிவிட்டார். ஆதலின் அந்த மானத்தின் அடிப்படையிற் பிறந்த வெகுளி; வெகுளியின் வெளிப்பாடான ஊடல் ஊடலின் வெளிப்பாடான, ‘எம்மைத் தீண்டுவீராயின் திருநீல கண்டம் ” என்ற ஆணையுமாகும். அம்மையாரின் பொறுக்க ஒண்ணா வெகுளியை யாரும் அறியமுடியாமல் அதனை மறைத்து விட்டார். வெறும் ஊடலில் வெறுப்பு இல்லை; எனவே அதனைத் தணித்து விடலாம் எனத் திருநீலகண்டர் கருதினார். ஆனால் மானப் பிரச்சனையில் தோன்றிய வெகுளியில் பிறந்த ஊடலாகலின் அதனை மாற்ற முடியாமல் போயிற்று. சாதாரண ஊடலின் ஆணை வைத்தல் இல்லை. புறனடையாக வெகுளியின் அடிப்படையில் தோன்றிய ஊடலாகலின் இது மாற்ற ஒண்ணாத தாக ஆகிவிட்டது. 9 & கோட் புலியார் வெகுளி இந்த நுணுக்கமான வேறுபாட்டை நினைந்து பாராமையால் தான் பேராசிரியர் முன்னர்க் கூறப் பெற்றவாறு தொல்காப்பியத் துக்கு உரை வகுத்தார்.