பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 5 0 பெரியபுராணம்- ஓர் ஆய்வு இதேபோல வெகுளியை வெளிக் காட்டாமல் செயல்புரிந்த மற்றொரு பக்தர் கோட்புலியார் என்ற அடியாராவார். மன்னர்கட்கு உதவியாகச் சென்று போரிடும் குடியில் பிறந்த இவர் ஒரு முறை இறைவனுக்கு ஒர் ஆண்டு முழுதுக்கும் அமுதுபடி ஆக்குவதற்குரிய நெல்லைக் கூடாகக் கட்டி வைத்தார். உடனே அரசாணைப்படிப் போர் செய்யப் புறப்பட வேண்டிய சூழ்நிலை உருவாயிற்று. சுற்றத்தார்கள் அனைவரையும் தனித்தனியே அழைத்து ஓர் எச்சரிக்கை விடுத்தார் எனச் சேக்கிழார் கூறுகிறார். 'தந்தமர்கள் ஆயினார் தமக்கெல்லாம் தனித்தனியே எந்தையார்க்கு அமுதுபடிக்கு ஏற்றிய நெல் இவை அழிக்க சிந்தை ஆற்றா நினைவார் திருவிரையாக் கலி என்று வந்தனையால் உரைத்தகன்றார் மன்னவன் மாற்றார் முனைமேல் '" என்ற பாடலில் பல புதிய கருத்துக்கள் பேசப்பெறுகின்றன. இறைவனுக்கு அமுதுபடிக்காக நெல்லைக் கூடு கட்டி வைத்தல் இந் நாட்டில் தொன்று தொட்டுவரும் பழக்கமாகும். ஆனால் அவ்வாறு கட்டிவைத்த கோட்புலியார் அதற்குமேற் செய்த செயல் வியப்பை விளைப்பதாக உள்ளது. கூடுகட்டி வைத்த பக்தர், சுற்றத்தார்கள் அனைவரையும் தனித்தனியே அழைத்து 'இறைவனுக்கு அமுதுபடிக்கு உள்ள நெல்லை இக் கூட்டில் வைத்துள்ளேன். முடியவில்லை என்றோ, வேறு வழியே இல்லை என்றோ, இதனை யாரும் பயன்படுத்தக்கூடாது. இது இறைவன் மேல் ஆணை’ என ஆணை வைத்துப் போயினார். இதிலிருந்து இரண்டைப் புரிந்து கொள்ளமுடிகிறது. கோயில் சொத்தை அபகரித்து உண்பவர்கள் அன்றும் இருந்தனர் என்பது ஒன்று. இதனை நன்கறிந்திருந்தமையின் கோட்புலியார் அவர் களைத் தனித்தனியே அழைத்து எச்சரிக்கை செய்து இறைவன் மேல் ஆணையும் வைத்தார் என்பதையும் சேக்கிழார் விரிவாகப் பேசுகிறார். 'விரையாக்கலி என்ற தொடர் இறைவன்மேல் ஆணை என்ற பொருளில் தொண்டை நாட்டுப் பகுதியில் வழங்கி யிருத்தல் வேண்டும். இந் நூலே அன்றி, காஞ்சிப் புராணத்திலும் ஒர் இடத்தில் இத்தொடர் இப்பொருளில் ஆளப் பெறுகிறது. இறைவன் மேல் ஆணை வைத்தாலுங்கூடத் தவறு செய்பவர்கள் செய்துகொண்டுதான் இருப்பார்கள் என்பதற்கு இந்த வரலாறே உதாரணமாகும். கோட்புலியார் போருக்குச் சென்ற சில நாட்களில் ஊரில் பஞ்சம் வந்தது: இவருடைய சுற்றத்தார் அனைவரும் கோவிலுக்குச் சென்று பாதுகாவலாக வைக்கப்